»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எங்கள் அண்ணாவை மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்த விஜய்காந்த் தனது அடுத்த படத்தையும் தெலுங்கில்இருந்து தான் இறக்குமதி செய்துள்ளார். படத்துக்குப் பெயர் கஜேந்திரா.

ஜூனியர் என்.டி.ஆர். நடித்து சக்கைபோடு போட்ட சிம்மாத்ரிதான் கஜேந்திராவாகிவிட்டது. படத்தைஇயக்குவது ஆள வந்தான், பாபா ஆகிய டப்பா படங்களைத் தந்த சுரேஷ் கிருஷ்ணா.

எங்கள் அண்ணாவில் மலையாளியான நமிதாவை ஹீரோயினாக்கிய தமிழ் பற்றாளரான விஜய்காந்த்,கஜேந்திரா படத்துக்கு தெலுங்கில் இருந்து லயாவை இழுத்து வந்துள்ளார். இவர் தெலுங்கில் பல படங்களில்நடித்தவர்.

படத்தைத் தயாரிப்பது பிதாமகனை தயாரித்த துரை. இது முழுக்க, முழுக்க விஜய்காந்துக்கு வகையான ஆக்ஷன்படம். படத்தில் 5 வில்லன்களாம்.

மகாபலிபுரம், கேரளா, சென்னை, ராமேஸ்வரம், திருச்செந்தூர் என பல இடங்களில் படத்தை சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.கடும் வெயிலிலும் கூட கருப்பு லெதர் ஜெக்கட்டுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்காந்த். (மாடர்ன் ஆக்ஷன்படமாம்!). கையில் வித்தியாசமான ஆயுதங்களை எல்லாம் வைத்துக் கொண்டு சுழற்றுகிறார், வீசுகிறார்.

படத்தை மே மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். விஜய்காந்தின் ஆஸ்தான வசனகர்த்தா லியாகத்அலிகான் தான் வசனம் எழுதுகிறார். இசை தேவா.

முதலில் இந்தப் படத்துக்கு சிங்கத்தமிழன் என்று பெயர் வைக்க இருந்தார்களாம். அது ரொம்ப ஓவராகவிஜய்காந்துக்கே படவே, கஜேந்திரா ஆக்கிவிட்டார்கள்.

கவர்ச்சியில் லயா பஞ்சமே வைக்காதவர். ஆந்திராவில் மழையில் நனையும் கிக் பாடல்களுக்கு ரொம்பவேபேமஸானவர் என்றாலும் அவர் மட்டும் போதாது என்று நினைக்கும் கஜேந்திரா யூனிட்டார், மும்பை மாடல்ஒருவரையும் கவர்ச்சிக் களத்தில் இறக்கிவிடப் போகிறார்களாம்.

கமலுக்கு ஒரு பிளாப், ரஜினிக்கு வாழ்க்கையிலேயே மிகப் பெரிய பிளாப் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணாவை நம்பிகோதாவில் குதித்திருக்கும் விஜய்காந்துக்கு ரொம்பவே தில் தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil