»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஒண்ணும் ஒண்ணும் நாலு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆட்டோகிராஃப் மல்லிகா.

விவகாரமாக டைட்டில் வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, நியூ பட ரேஞ்சுக்கு கற்பனை எதுவும் செய்து விடாதீர்கள்.இது சுத்தமான காதல் கதை என்று அடித்துச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் கன்னியப்பன்.

அகத்தியன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கும் இவர், இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் ஆகிறார். படத்தைப் பற்றிக் கேட்டால், எல்லா அறிமுக இயக்குநர்களைப் போலவே தமிழ்சினிமாவில் இதுவரை யாரும காட்டாத கோணத்தில் காதலைக் காட்டப் போகிறேன் என்கிறார்.

அப்படி என்னதான் கதையாம்? காதல் என்பதை சந்திக்காத ஆணோ, பெண்ணோ இந்த உலகில் இல்லை. ஆனால்பெரும்பாலானோரின் காதல் கல்யாணத்தில் முடிவதில்லை. அவ்வாறு கல்யாணத்தில் முடியாத இரு காதலர்கள்மீண்டும் சந்தித்துக் கொண்டால் என்னவாகும் என்பதை மையமாக வைத்தே இப் படத்தின் கதைஉருவாக்கப்பட்டுள்ளது.

அழகி படத்தின் வாசனை அடிக்கிறதே!. இருந்தாலும் நமக்கு எதுக்கு வம்பு? காசு போட்டு படம் எடுக்கும்தயாரிப்பாளர் பூவை கே. நடராஜனே கதைக்கு ஓ.கே. சொல்லிவிட்ட பிறகு நமக்கு என்ன வந்தது?

பிறகு படத்தின் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் (ராமகிருஷ்ணா நாயகன்), நாயகி மல்லிகா எனும்போதேதெரிந்திருக்கும் இது லோ பட்ஜெட் படம் என்று. படத்தில் வெண்ணிறாடை மூர்த்தி, சிட்டிபாபு, எம்.எஸ்.பாஸ்கர்,வண்டார் குழலி ஸ்மிதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி, அப்படியே கேரளா, பாண்டிச்சேரி, விசாகப்பட்டினம் என்று ஒரு ரவண்ட்அடிக்கவிருக்கிறார்கள். பட்ஜெட் ஒத்துழைத்தால் பாடல்களை லண்டன் மற்றும் இலங்கையில் எடுக்கவும்திட்டமிருக்கிறதாம்.

படத்தில் கதாநாயகி மல்லிகா கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு தூக்கமில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். மலையாளத்தில் நேருக்கு நேர், தமிழில் திருப்பாச்சி படத்தில் விஜய்க்குத் தங்கை வேடம்.மகாநடிகன் படத்தில் முதல்வர் வேடம் என பறந்து பறந்து நடிக்கிறார்.

தெலுங்கு ஆட்டோகிராஃப்பிலும் இவர் அதே கமலா வேடத்தை ஏற்றிருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றால்தெலுங்கில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் சோகம் பாருங்கள், படம் பெயிலாகிவிட்டது.

தெலுங்கில் 6 பாட்டு, 5 பைட்டு இருந்தாத்தான் ஓடும் என்பது தெரியாத மல்லிகா அதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

விட்டுத் தள்ளுங்க, மல்லிகா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil