»   »  மீண்டும் மம்முட்டி - மோகன்லால்

மீண்டும் மம்முட்டி - மோகன்லால்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளனர். படத்தின் பெயர் யுகபுருஷன்.

கேரளாவில் சமூக சீர்திருத்தத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திய சமூக சிந்தனையாளர் நாராயணகுரு. இவரது வாழ்க்கை வரலாற்றை யுக புருஷன் என்ற பெயரில் படமாக்கவுள்ளனர்.

நாராயண குரு வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார். விவேகானந்தர் வேடத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார்.

1856ம் ஆண்டு பிறந்து 1928ம் ஆண்டு மறைந்த ஸ்ரீநாராயண குருவை கேரள மக்கள் குருதேவா என்று அன்புடன் அழைக்கின்றனர். சமூகத்தில் புரையோடிக் கிடந்த ஜாதியக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் நாராயண குரு.

சமத்துவம், அனைத்து ஜாதியினருக்கும் இடையே ஒற்றுமை, ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பது ஆகியவற்றில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் நாராயண குரு.

ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்ற லட்சியத்துடன் செயல்பட்டவர் நாராயண குரு. அந்த நிலை வர வேண்டும் என்பதற்காக கடுமையாக பாடுபட்டவர்.

தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. நாராயண குரு வேடத்தில் நடிப்பதற்காக மிகவும் பெருமைப்படுவதாக மம்முட்டி கூறியுள்ளார்.

இதுகுறித்து மம்முட்டி கூறுகையில், இது திரைப்படமாக மட்டுமல்லாமல், டாக்குமெண்டரி போலவும் படமாக்கப்படும். நாராயண குரு போதித்த கொள்கைகளை மீண்டும் அனைவரிடத்திலும் கொண்டு போகும் வகையில் படம் இருக்கும்.

முதலில் நாராயண குரு வேடத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேனா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் நடிக்கத் தயங்கினேன். ஆனால் தயாரிப்பாளரும், மற்றவர்களும் என்னிடம் இந்த கேரக்டர் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று வலியுறுத்தியதால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்தப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெறும்போது இன்னும் மகிழ்ச்சி அடைவேன் என்றார் மம்முட்டி.

ஆர்.சுகுமாரன் படத்தை இயக்குகிறார். ஏவி.அனூப் படத்தைத் தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு ெதாடங்கவுள்ளதாம்.

இப்படத்தில் இன்னொரு முக்கிய அம்சம், மோகன்லாலும் படத்தில் இருக்கிறார். அவர் விவேகானந்தர் வேடத்தில் நடிக்கவுள்ளார். மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக இருவரும் நடித்த படம் ஹரிகிருஷ்ணன்ஸ். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில் நாராயண குரு படத்துக்காக இருவரும் மீண்டும் இணைகின்றனர்.

இதுகுறித்து மம்முட்டி கூறுகையில், நாங்கள் இணைந்து நடிப்பது புதிய விஷயமல்ல. உண்மையில், மலையாள நடிகர் சங்கத்திற்காக இருவரும் இணைந்து ஒரு படம் செய்வதாக உள்ளது. அந்தப் படம் அனேகமாக நாராயண குரு படத்திற்கு முன்பாகவே தயாரிக்கப்பட்டு வெளியாகி விடும் என்றார்.

இப்படத்தில் 30 வயது முதல் 73 வயது வரையிலான பல்வேறு தோற்றங்களில் மம்முட்டி தோன்றவுள்ளார்.

படத்தில் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட தலைவர்களும் இடம் பெறுகிறார்கள். இந்த வேடங்களுக்கான நடிகர்களைத் தேடி வருகிறார்களாம்.

நாராயண குரு, கேரள திரைப்பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more about: mammootty

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil