»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்:

படங்களில் டான்ஸ்களும், பாட்டுக்களும் இருப்பதில் தவறில்லை என்கிறார் டைரக்டர்மணிரத்னம்.

இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடக்கவுள்ள திரைப்பட விழாவில் மணி ரத்னம்கலந்து கொள்கிறார். அதற்காக லண்டன் வந்துள்ள மணி ரத்னம், அங்குள்ள நேருசென்டரில் நடந்த திரைப்பட பிரமுகர்கள், ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மணி ரத்னம் பேசுகையில், ஒருபடத்தில் டான்ஸும், பாட்டும் இருப்பதில்தவறில்லை. கதை இறுக்கமாகவோ அல்லது சீரியஸாகவோ இருக்கும்போது அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை லேசாக்கும் விததில் பாட்டுக்களையும்,டான்ஸ்களையும் வைப்பதில் தவறில்லை.

எனது படங்களில் டான்ஸுக்கும், பாட்டுக்கும் நான் முக்கியத்துவம் தருகிறேன். இவைஇரண்டும் இல்லாமல், எனது படங்கள் இல்லை. கதையை வெளிப்படுத்த உதவும் ஒருஊடகமாகவே இவை இரண்டையும் நான் கருதுகிறேன்.

வெறும் வசனங்கள் மூலம் படத்தைச் சொல்லாமல், பாட்டு, டான்ஸ் மூலமும்படத்தைப் புரிய வைக்க முடியும். படத்தில் வரப் போகிற சீரியசான விஷயத்தைஅவர்களுக்குச் சொல்லும் முன் அவர்களை தயார் படுத்த பாடல்களையும்,டான்ஸ்களையும் பயன்படுத்தலாம். அதைச் சொல்லும் விதத்தில் சொன்னால் நிச்சயம்ஏற்றுக் கொள்வார்கள்.

ரோஜா படத்தில் அடிக்கடி தேசியக் கொடியை காஷ்மீர் தீவிரவாதிகள் எரிப்பது போலவருகிறதே. இது தவறில்லையா என்று கேட்கிறார்கள். படத்தை முழுமையாகபார்க்காமல், புரிந்து கொள்ளாமல் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது.

ஒரு படத்தைத் தயாரிக்கும்போது, படத்தில் வரும் காட்சிகளின் உணர்ச்சிகளைஅப்படியே தத்ரூபமாக காட்ட வேண்டும். ரோஜா படம், வடக்கில் இந்தியா சந்தித்துவரும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டது. தெற்கிலிருந்து சென்ற ஒருபெண்ணின் கண்கள் வழியாக வடக்கில் நடக்கும் பிரச்சினைளை பார்த்த படம் இது.அங்கு என்ன நடக்கிறதோ அதை அப்படியேதான் காட்ட முடியும், வேண்டும்.

உண்மையிலேயே அங்கு கொடி எரிக்கப்படுகிறது. அதை எரிக்கும் தீவிரவாதிகள்,தங்களுக்கான காரணத்தை நியாயப்படுத்துகிறார்கள். அதை நாம் மாற்றிக் காட்டமுடியாது. இந்த சம்பவங்கள் மூலம் இந்தியர்களாகிய நமக்கு சந்தோஷம் இல்லைஎன்பதை சொல்ல இந்தக் காட்சிகள் அவசியமாக இருந்தது.

இதேபோல, பம்பாய். இதில் வரும் சில காட்சிகள், உண்மையிலேயே அங்குநடந்தவை. அங்கு வசித்த மக்களின் காலடியில் நடந்த நிகழ்வுகளை எனது படத்தில்பல காட்சிகளில் வைத்திருப்பேன்.

பம்பாய் படத்தை திரையிடுவதற்கு சென்சார் போர்டு சில தடங்கல்களைஏற்படுத்தியது. அரசியல்வாதிகளின் தலையீடும் இருந்தது. படம் முடிந்தும் கூட,அப்போது தேர்தல் வந்ததால், மூன்று மாதத்திற்கு முடக்கப்பட்டது என்றார் மணிரத்னம்.

ஐ.ஏ.என்.எஸ்.

Read more about: cinema mani ratnam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil