»   »  கல்லூரி - ஆடியோ ரிலீஸ்!

கல்லூரி - ஆடியோ ரிலீஸ்!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்லூரி படத்தின் ஆடியோ சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.

இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் கல்லூரி. காதல் தந்த பாலாஜி சக்திவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் புதுமுகம் அகில் நாயகனாக நடித்துள்ளார். தமன்னா நாயகியாக நடித்துள்ளார். காதல் படத்திற்குப் பிறகு பரத் பிரபலமானது போல, அகிலும் பிரபலமாவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

கல்லூரி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை க்ரீன் பார்க் ஹோட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது ஷங்கரின் எஸ் மியூசிக் ஆடியோ நிறுவனமும் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு கல்லூரி.

ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம், அமீர், தங்கர் பச்சான், வசந்தபாலன், சிம்புதேவன், லிங்குச்சாமி, ராதாமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

நடிகர் பிரகாஷ்ராஜ், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பார்த்திபன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அத்தோடு நில்லாமல் சுவாரஸ்யமாகவும் பேசி கூட்டத்தைக் கலகலக்க வைத்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டே முக்கால் மணி நேரம் நடந்த நிகழ்ச்சியை தனக்கே உரிய மெல்லிய புன்னகையுடன் ரசித்துப் பார்த்தார்.

நிகழ்ச்சியில் மணிரத்னம் கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் 15 விநாடிகளுக்குப் பேசினார். ஒரு தமிழ்ப் பட விழாவில் அவர் அதிக நேரம் பேசியது இதுதான் என்று கூறப்படுகிறது!!

மணிரத்னம் பேசுகையில், பாலிவுட் இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்து நாம் வெகு தூரம் பின்தங்கியுள்ளோம். அதேசமயம், தென்னிந்தியத் திரையுலகில் நாம் பல மைல்கள் முன்னேற்றத்தில் இருக்கிறோம் என்றார்.

ஆடியோ சிடியை மணிரத்னம் வெளியிட, ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

Read more about: kallori

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil