»   »  வருகிறது இன்னொரு 'வாளமீனு'!

வருகிறது இன்னொரு 'வாளமீனு'!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கும். சித்திரம் பேசுதடி மிஷ்கினுக்கு சிங்கிள் பாட்டு சென்டிமென்ட் போலும். இதனால்தான் தான் அடுத்து இயக்கப் போகும் 'அஞ்சாதே' படத்திலும் அட்டகாசமான சிங்கிள் பாட்டைப் போட ஏற்பாடு செய்து வருகிறாராம்.

மிஷ்கினுக்கு தமிழ் சினிமாவில் அட்ரஸ் போட்டுக் கொடுத்த படம் சித்திரம் பேசுதடி. அவருக்கு மட்டுமல்லாமல், மலையாளத்து நரேன், பாவனா ஆகியோருக்கும் பெத்த பெயரை வாங்கிக் கொடுத்த படம் சித்திரம் பேசுதடி.

இவர்கள் எல்லாரையும் விட சூப்பர் ஹிட் ஆனவர் கானா உலகநாதன். சென்னைக்குள்ளேயே கானாவுடன் வலம் வந்து கொண்டிருந்த உலகநாதன், வாள மீனு பாட்டுக்குப் பிறகு சர்வ லோகமும் சஞ்சாரிக்கும் அளவுக்கு பெரிய ஆளாகி விட்டார்.

மாளவிகாவுக்கும், இப்பாடல் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. அவரது அலட்டல் ஆட்டவும், அந்த உதட்டுச் சுளிப்பும், ஜிலுஜிலு சிரிப்பும் இன்னும் கூட மறக்க முடியாத அளவுக்கு அசத்தி விட்டது போங்கோ!

மிஷ்கின் மறுபடியும் கேமரா, ஆக்ஷன் சொல்ல வந்துள்ளார். இம்முறையும் அவரது நாயகன் நரேன்தான். என்கவுண்டர் ஸ்பெலிஷ்ட் ஆக நடிக்கிறாராம். இதற்காக உடம்பை இறுக்கி, பலவித உடற்பயிற்சிளைச் செய்து கட்டுக்கோப்பான போலீஸ் அதிகாரி போல மாறி வருகிறாராம்.

இவர் தவிர பிரசன்னாவும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இதுபோதாதென்று மலையாளத்திலிருந்து அஜ்மல் என்ற புதுமுகத்தையும் கூட்டி வருகிறார் மிஷ்கின். எல்லோரும் மலையாள ஹீரோயின்களை அறிமுகப்படுத்த ஆசைப்படுவார்கள். மிஷ்கின் மட்டும் வித்தியாசமாக மலையாளத்து ஹீரோக்களை இறக்குமதி செய்கிறாரே

இயக்குநர் அகத்தியனின் மகளும், சென்னை 600028 படத்தின் நாயகியுமான விஜயலட்சுமிதான் இப்படத்திலும் நாயகி.

முதல் படத்தைப் போலவே இப்படத்திலும் அட்டகாசமான ஒரு குத்துப் பாட்டை வைக்கப் போகிறாராம் மிஷ்கின். முதல் படத்தில் மாளவிகாவை ஆட வைத்த மிஷ்கின், இப்படத்தில் இன்னொரு முன்னணி நடிகையை ஆட வைக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

அஞ்சாதேவில் அசத்தப் போகும் அந்த 'சோலை' மீனு யாரோ?

Read more about: vijayalakshmi
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil