»   »  முமைத் காட்டில் இடி மழை!

முமைத் காட்டில் இடி மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை வீரன் படத்தில் முமைத்கான் போட்ட மன்மத ஆட்டத்தால் அவருக்கு சில புதிய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாம். கை நிறைய குத்தாட்ட வாய்ப்புகள் படு ஷோக்காக குவிந்து கிடப்பதால் மகிழ்ச்சியாகியுள்ளார் முமைத்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு இறக்குமதியான மும்பை பாம் முமைத் கான். டாக்டர் ராஜசேகர் நடித்த எவடத்தே நக்கேண்டி படத்தில்தான் முதல் முறையாக திறம்பட ஆடி வரும்படியை ஆரம்பித்தார். அப்படத்தில் முமைத்கானின் ஆட்டம் அசரடிக்கவே, தொடர்ந்து லாரன்ஸ் ராகவேந்திரா தனது டான் படத்தில் ஆட அழைத்தார். ஆனால் கடைசி நேரத்தில் வேண்டாம் என்று விட்டார்.

இதனால் வருத்தத்தில் இருந்த முமைத்துக்குத் தமிழ் கை கொடுத்தது. தடதடவென அவர் ஆடியதைப் பார்த்து பலரும் கூப்பிட்டு குத்துப் பாட்டுக்கு ஆடச் சொன்னார்கள்.

அப்படி வந்த வாய்ப்புதான் மதுரை வீரன். இப்படத்தில் முமைத் கான் ஆடியுள்ள குத்தாட்டம் ரசிகர்களை கலங்கடித்திருக்கிறதாம். தியேட்டர்களில் இந்தப் பாட்டுக்கு மட்டும் அகோர வரவேற்பாம். முமைத்தின் மன்மத அசைவுகள், ரசிகர்களை ரொம்பவே இம்சித்து விட்டதாம்.

முமைத்கானின் இந்த ஆட்டத்தைப் பார்த்து இப்போது மேலும் பல குத்தாட்ட வாய்ப்புகள் வந்துள்ளதாம். இதனால் முமைத் காட்டில் குத்து மழை குபீரிட்டு குதூகலித்து வருகிறது.

என்னடா இது நமக்கு வந்த நேரம் என முமைத்தும் படு ஜாலியாக வருகிற வாய்ப்புகளை எல்லாம் வரவேற்று பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஜாக்கெட் சகிதம் ஆடக் கிளம்புகிறாராம்.

கூடிய விரைவிலேயே முமைத்கானின் ஆட்டம் இல்லாத படமே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை படு வேகமாக (மோசமாக) போய்க் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

ஆட்ரா ராமா, ஆட்ரா ராமா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil