கடைசி வரை காலில் இருந்த தங்க மெட்டி.. கோமாவிலேயே பிரிந்த உயிர்.. சாவித்ரியின் கண்ணீர் கதை!

சென்னை: நடிகையர் திலகம், மகா நடிகை என பெயர் எடுத்த நடிகை சாவித்திரி, ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். நடுத்தர குடும்பத்தில் பிறந்த சாவித்ரிக்கு சிறுவயதிலேயே நடிப்பு மேல் அதிக ஆர்வம் இருந்ததால், வாய்ப்பு தேடி சென்னை வந்தார். அப்போது, ஜெமினி நிறுவனம் அடுத்த படப்பிடிப்புக்காக நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருந்த போது, அதில் சாவித்திரி கலந்து கொள்ள சென்ற போது, அங்கிருந்தவர்கள், யாரு உன்னை நடிக்க அழைத்தது என்று சொல்லி, உள்ளேயே விடாமல் திரும்பி அனுப்பி உள்ளார்கள்.

இதனால், மன வேதனையுடன் வெளியில் வந்த சாவித்ரி கொஞ்சமும் தளர்ந்து போகாமல் மீண்டும் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். அப்போது, இயக்குநர் எல்.வி பிரசாத் கல்யாணம் பண்ணிப்பார் என்கிற படத்தில், சாவித்ரியை இரண்டாவது ஹீரோயினாக கமிட் செய்தார். ஆனால், எதிர்பாராத விதமாக முதல் ஹீரோயினுக்கும் இயக்குநருக்கும் வாக்குவாதம் ஏற்பட சாவித்ரியே அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து தேவதாஸ், வஞ்சம், மனம்போல் மாங்கல்யம், மிஸ்ஸியம்மா என அடுத்தடுத்து பல படத்தில் நடித்து புகழ் பெற்றார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெமினி கணேஷன், நாகேஷ் ராவ் ரெட்டி போன்ற பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார்.

Savitri painful story
Photo Credit:

நடிகை சாவித்ரி: எந்த ஜெமினி நிறுவனம் சாவித்ரியை வெளியில் போக சொன்னதோ அந்த ஜெமினி நிறுவனத்தோட உரிமையாளரான ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டடது என்று தெரிந்தும். நடிகை சாவித்திரி ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டு இருவரும் தி நகர் ஹபிபுல்லா தெருவில் பெரிய பங்களாவையே கட்டி அதில் வசித்து வந்தனர். புகழின் உச்சியில் இருந்த சாவித்ரி பிராப்தம், குழந்தை உள்ளம் என இரண்டு படத்தை இயக்கினார். அந்த படங்கள் தோல்வி அடைந்ததால், தயாரிப்பு நிறுவனத்திற்கு தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் கொடுத்து நஷ்டத்தை ஈடு செய்தார் சாவித்ரி.

Savitri painful story
Photo Credit:

துரோகம் செய்த ஜெமினி கணேசன்: இந்த நேரத்தில் தான் சாவித்ரிக்கும் ஜெமினி கணேசனுக்கும் இடையில் பிரச்சனை வர ஆரம்பித்துள்ளது. ஒரு கட்டத்தில் ஜெமினிகணேசன் உனக்கு இயக்கம், தயாரிப்பு எல்லாம் தேவை இல்லாத வேலை அதை தூக்கி ஒரு ஓரத்தில் போடு என கடுமையாக திட்டி உள்ளார். இதனால், ரெண்டு பேருக்கும் நடுவில் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்குள்ளும் மனகசப்பு வந்துள்ளது. இந்த நிலையில், ஜெமினி கணேசன் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்த விஷயம் சாவித்ரியின் காதுக்கு வர, இதனால் கோபமடைந்த சாவித்ரி ஜெமினி கணேசனை விட்டு பிரிந்தார். மன வேதனையில் இருந்த சாவித்ரி குடிக்கு அடிமையாகி கடுமையாக குடிக்க தொடங்கினார். இதனால் உடல் எடை அதிகரித்து, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட, சாவித்ரியின் புகழும், பணமும் படிபடியாக குறைய ஆரம்பித்தது.

துரோகத்தால் வீழ்ந்த சாவித்ரி: இந்த நேரத்தில் தான், வருமான வரித்துறை பிரச்சனையால் ஆசை ஆசையாக தி நகர் ஹபிபுல்லா சாலையில் கட்டிய பங்களவை வருமான வரித்துறையினர் ஜப்தி செய்கின்றனர். அது மட்டுமில்லாமல் பணம், தங்க நகை என அனைத்தும் ஜப்தி செய்யப்படுகிறது. சாவித்ரி முதன் முதலாக ஜெமினி கணேசன் காலில் போட்டு விட்ட தங்க மேட்டியை மட்டும் எந்த சூழ்நிலையிலும் கழட்டவே இல்லை. அனைததையும் பறி கொடுத்துவிட்டு, எந்தவிதமான வசதியும் இல்லாத ஒரு சின்ன வீட்டில், தன் மகள் மகன், அம்மாவுடன் வசித்து வந்தார். தன் மகன் மகளின் எதிர்காலத்தை நினைத்து வருத்தப்பட்ட சாவித்ரி, தன் உறவுக்காரர் ஒருவருக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்தார்.

மகனின் எதிர்காலத்தை நினைத்து வருத்தப்பட்ட சாவித்ரி, தன் மகனுக்காக சின்ன சின்ன வேடங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். எப்படியாவது தன் மகனை கரைசேர்த்துவிட வேண்டும் என நினைத்த சாவித்ரி, குடிபோதைக்கு அடிமையானதோடு மட்டுமல்லாமல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதையும் பொருட்படுத்தாமல் கிடைத்த வேடத்தில் நடித்து வந்தார். மைசூரில் ஒரு படப்பிடிப்பிற்காக தன் மகனோட சென்ற சாவித்திரியின் உடல் நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்று நினைவு திரும்பாமலே 1981 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். தன் விடாம முயற்சியால் புகழின் உச்சிக்கு வந்த சாவித்ரி துரோகத்தால் வீழ்ந்து கடைசியில் மறைந்து போனார்.

More from Filmibeat

Read more about: savitri
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X