»   »  மச்சக்காரன் பஞ்சாயத்து தீர்ந்தது!

மச்சக்காரன் பஞ்சாயத்து தீர்ந்தது!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
மச்சக்காரன் படத்தை திருட்டு வீடியோவில் படமாக்க முயன்றதாக எழுந்த சர்ச்சையை தயாரிப்பாளருடன் சமரசமாக தீர்த்துக் கொண்டு விட்டதாக விநியோகஸ்தர் நாக் ரவி கூறியுள்ளார்.

மச்சக்காரன் படத்தின் ஓவர்சீஸ் உரிமையை வாங்கியிருந்தவர் நாக் ரவி. தீபாவளிக்கு முன்பு இந்தப் படத்தின் பிரதிகள் சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது ஒரு பிரதியை தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டருக்கு எடுத்துச் சென்று திருட்டு வீடியோவில் படம் பிடிக்க முயன்றார் நாக் ரவி என்ற சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரத்தில் தேவி ஸ்ரீதேவி தியேட்டர் சூறையாடப்பட்டது. நாக் ரவியும் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இந்தப் புகார்களை நாக் ரவி மறுத்தார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேனாம்பேட்டை போலீஸாரும், நாக் ரவி மீது தவறு இல்லை என்று கூறினர்.

இதையடுத்து நாக் ரவி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டது. நாக் ரவியையும், மச்சக்காரன் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் தமிழ்வாணன் ஆகியோரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு தரப்பும் தாங்கள் போலீஸில் கொடுத்த புகார்களை திரும்பப் பெற்று விட்டனர். பிரச்சினையும் சுமூகமாக தீர்ந்து விட்டதாக நாக் ரவியும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நேற்று நடிகர் சங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாக் ரவி கூறுகையில், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. ஓவர்சீஸ் விநியோக உரிமை பெற்ற பிரதியை இந்தியாவில் திரையிடக் கூடாது என்ற விதிமுறை இருப்பது எனக்குத் தெரியாது.

இது தெரிந்திருந்தால் நிச்சயம் ஓவர்சீஸ் பிரதியை வைத்து எனது நண்பர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டியிருக்க மாட்டேன்.

தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்ன. தமிழ் திரைத்துறைக்கு எனது சேவை வழக்கம் போல தொடரும் என்றார்.

Please Wait while comments are loading...