»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிண்ணென்று இருக்கும் நமிதாவை முந்தைய ஜெனரேசன் நடிகர்கள் விட மாட்டார்கள் போலிருக்கிறது.

விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ் என மூத்த குடிகளுடன் அடுத்தடுத்து நடித்த நமிதாவை அடுத்ததாக புக் செய்திருப்பது காதல் கிறுக்கன்பார்த்திபனும், ஆ.. ஊ.. உகா உகா (அதாங்க ஆக்ஷன் கிங்) அர்ஜூனும்.

சின்னப் புள்ளையான நமிதாவை கேப்டன் எங்கள் அண்ணா படம் மூலம் கோலிவுட்டுக்கு ஓட்டி வந்தார். இதையடுத்து சரத்குமார் ஏய்என்று நமிதாவைக் கூப்பிட்டு, தனது ஏய் படத்தில் நடிக்க வைத்தார். அதில் ரசிகர்கள் ஏய்ய்ய்....யப்பா என்று துள்ளித் துடிக்கும் அளவுக்குகவர்ச்சி காட்டினார் நமிதா.

அடுத்து வந்தார் சத்யராஜ், தனது மகா நடிகன் படத்தில் நடிகனிடம் ஜொள்ளுவிடும் நடிகையாக அவரை நடிக்க வைத்தார். நடிகையாகவேஅதில் பாத்திரமேற்ற நமிதா போட்ட ஆட்டத்தில் மும்தாஜ் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என மலையேற வேண்டி வந்தது.

அந்த அளவுக்கு களியாட்டத்தில் ஆழந்த ஈடுபாடு காட்டினார் நமிதா.

இப்படியே போய்க்கிட்டு இருகே, அஜீத், விஜய் கண்ணுக்கெல்லாம் நாம் தெரியவே மாட்டோமா என்று நமிதா ஏங்கிக் கொண்டிருந்தநிலையில் அவரது வீட்டுக்கு பார்த்திபனின் பட வாய்ப்பும், அதைத் தொடர்ந்து அர்ஜூனுடன் நடிக்கும் வாய்ப்பும் வந்து சேர்ந்துள்ளது.

ஆனால், நமிதா நல்ல விவரம். அரசனுக்கு ஆசைப்பட்டு எதையோ இழப்பது எல்லாம் இல்லை. வந்ததை வரவில் வைப்போம் ரகம்.

இதனால் மூத்தோராக இருந்தாலும் பார்த்தி அண்ட் அர்ஜூனுக்கு ஓ.கே சொல்லிவிட்டு அட்வான்ஸை ஒரு கையில் வாங்கிக் கொண்டுகால்ஷீட்டை இன்னொரு கையால் எடுத்துத் தந்துவிட்டார்.

நமிதா-அர்ஜூன் நடித்தப் போகும் படத்தை இயக்கப் போவது செல்வா. படத்தின் பெயர் ஆணை. வழக்கமான அர்ஜூன் படபார்முலாப்படி இன்னொரு ஹீரோயினும் நடிக்கப் போகிறாராம்.

இதில் சங்கவியும் ஊர்வசியின் கணவரான மலையாளத்து சேட்டன் மனோஜ் கே.ஜெயினும் ஒரு ஜோடி போட்டு நடிக்க உள்ளார்கள்.

காமெடிக்கு வடிவேலு, குணச்சித்திரத்துக்கு டெல்லி கணேஷ், சண்டைக்கு ராஜ்கபூர், வில்லன் வேடத்துக்கு தலைவாசல் விஜய் என்று பலரும்நடிக்கிறார்கள்.

இன்னொரு ஹீரோயினுக்கான தேடலுடன் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத்தில் 15 நாட்கள் சூட்டிங்கை முடித்துவிட்டுபாடல் காட்சிகளுக்காக லண்டன், சுவிஸ் பக்கம் போகிறார்கள்.

இந்தப் படத்தின் சூட்டிங்குக்காக ஹைதராபாத்தில் ஒரு ஸ்டுடியோவின் விடுதியில் தங்கியிருந்தபோது இரவு 12 மணியளவில் நமிதாவின்அறைக் கதவை யாரோ தட்டினார்களாம். இதையடுத்து மறு நாளே அந்த ரூமைக் காலி செய்துவிட்டு 5 ஸ்டார் ஹோட்டலுக்கு ஓடிப்போய்விட்டாராம். யாருப்பா அது தட்டுனது? ஒருவேளை பேயா இருக்குமோ?

சரி அத விடுங்க.

நமிதா-பார்த்திபன் நடிக்கவுள்ள அடுத்த படத்தைத் தயாரிக்க இருப்பது வி.சேகர். திருவள்ளுவர் கலைக்கூடத்தின் சார்பில் நல்ல புத்திசொல்லும் பல குடும்பப் படங்களை இயக்கி வெற்றிக் கொடி நாட்டிய அதே வி.சேகர் தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

முதல் படமான ஏய் மூலம் ரூ. 50 லட்சம் வரை நஷ்டப்பட்டு சில சொத்துக்களை இழந்த சேகர் தைரியமாய் எடுக்கும் இரண்டாவது படம்இது.

படத்தின் பெயர் தாதா (இது தமிழா, இந்தியா ராமதாஸ் சார்?). இதில் தாதாவாக நடிப்பது பார்த்திபன். கூடவே கவர்ச்சிக்காக வரப் போவதுநமிதா.

இதிலும் வடிவேலு இருக்கிறார். இப்போதெல்லாம் கோடம்பாக்கத்தில் படம் எடுக்க பிலிம் வாங்குகிறார்களோ இல்லையோ வடிவேலுவின்கால்ஷீட்டை வாங்கிவிடுகிறார்கள். அய்யா அவ்வளவு பிஸிய்யா.. அவ்வளவு பிஸி.

படத்தை இயக்குவது ஷக்தி சிதம்பரம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil