»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எவ்வளவோ வற்புறுத்தியும் கூட சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் நோசொல்லிவிட்டார். இதையடுத்து அந்த ரோலில் நவ்யா நாயரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

நீண்ட கால்ஷீட் தர டேட்ஸ் இல்லை என்று கூறிய ஐஸ்வர்யாவிடம், ஒரு 7 நாட்கள் மட்டும் கால்ஷீட் தந்தால்போதும் என்று பேசிப் பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இறங்கி வரவே இல்லை.

ஆனால், பத்திரிக்கைகளில் எல்லாம் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று செய்தி பரவிவிட்டதால் சந்திரமுகிகுழுவினருக்கு ஐஸ்வர்யாவை நடிக்க வைப்பது மானப் பிரச்சினையாகி விட்டது. இதையடுத்து அட்லீஸ்ட் கெளரவவேடத்திலாவது ஓரிரு காட்சிகளில் வந்து போகுமாறு ஐஸ்வர்யாவிடம் கேட்டனர். இதற்கு அதிகபட்சம் 3 நாள்கால்ஷீட் போதும்.

ஆனால், என்ன காரணமோ முடியாது என்று ஒரேயடியாக மறுத்து விட்டார் ஐஸ். இதனால் அடுத்த கதாநாயகியைத்தேடுவதில் சந்திரமுகி குழுவினர் மும்முரமாகியுள்ளனர்.

படத்தில் சிம்ரன், நயனதாரா ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டனர். இதில் பிரபுவுக்குஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மன நலம் பாதிக்கப்பட்ட பெண் வேடம் இது. நடிப்பில் சிம்ரன் அசத்துவார்என்பதால் அவருக்கே அந்த வேடம் என்று இறுதி செய்யப்பட்டுவிட்டது.

ரஜினிக்கு ஜோடி நயனதாராவா என்று கேட்டதற்கு, அவர் இல்லை. வேறு கதாநாயகியைத்தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார் படத்தின் இயக்குனர் பி.வாசு. நயனதாரா தமிழில் தற்போது ஐயா படத்தில்சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பெரும்பாலும் ரஜினிக்கு ஜோடியாக நவ்யா நாயர் நடிக்கலாம் என்று தெரிகிறது. பி.வாசுவுக்கு பூர்வீகம் கேரளதான். இதனால் தனது ஊரைச் சேர்ந்த நயனதாராவை படத்தில் புகுத்தியதோடு, ரஜினிக்கு ஜோடிாக நவ்யாநாயரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

இதற்கிடையே சந்திரமுகி படத்தின் பிஸினஸ் மிக வேகமாக நடக்கிறது. கோவை ஏரியாவிற்கு அட்வான்ஸ் மட்டும்50 லட்சம் தரப்பட்டுள்ளதாம். மற்ற ஏரியா வினியோகஸ்தர்களும் கையில் அட்வான்ஸ் தொகையுடன் சிவாஜிபிலிம்ஸ் அலுவலகத்தை நோக்கி படையெடுத்து வண்ணம் இருக்கிறார்கள்.

மிக விரைவில் வியாபாரம் ரூ.30 கோடியைத் தாண்டி விடுமாம். இதனால் கையில் இருந்து சல்லி காசு போடாமல்இந்த அட்வான்ஸ் பணத்தில் ஒரு பார்ட்டை வைத்தே படத்தை எடுத்துவிட முடியும் சிவாஜி பிலிம்ஸால்.

ரஜினியின் பாபா படம் ரூ. 50 கோடிக்கு விலை போனது. ஆனால், படம் அட்டர் பிளாப் ஆனதால், ரூ. 25கோடியை தியேட்டர்காரர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் திருப்பித் தந்தார் ரஜினி. அந்த மாதிரி ஏதும்நடந்துவிடாமல் தவிர்க்க சந்திரமுகி படத்தின் விலையை பாபாவைவிட குறைவாகவே வைத்து விற்றுவருகிறார்களாம்.

அரசியலில் தனது வாய்ஸூக்கு அவ்வளவாக மவுசு இல்லை என்பதை உணர்ந்து கொண்டுவிட்ட ரஜினி, இந்தப்படத்தில் அரசியல் வாடையே இல்லாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டார். முழுக்க முழுகக ஜனரஞ்சகம்,காமெடி, செண்டிமென்ட், ஆக்ஷன் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து எல்லா தரப்பையும் திருப்திப்படுத்தும்முடிவில் இருக்கிறார் ரஜினி.

பாடல் காட்சிகளில் பின்னணியில் ஆடுவதற்கு மும்பையிலிருந்து மாடல்களை வரவழைக்கப் போகிறார்கள்.இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு 3,000 சம்பளம் மற்றும் நட்சத்திர ஹோட்டல் கவனிப்பு. எல்லாம்கவர்ச்சியைக் கூட்டத்தான்.

டெயில் பீஸ்: ரஜினிக்கு ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கவுள்ள நவ்யா நாயர் இப்போது அமிர்தம் என்ற படத்தில்நடித்து வருகிறார். இதில் கணேஷ் என்ற புதுமுகம் தான் ஹீரோ. இந்தப் படத்திற்கு இசையமைப்பதுஇளையராஜாவின் மகள் பவதாரிணி !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil