twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு இந்தியப் படம் கூட இடம்பெறவில்லை.

    By Shankar
    |

    Cannes Film Festival 2011
    சர்வதேச அளவில் மிகுந்த கவுரவமாகப் பார்க்கப்படும் 64 வது கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 11 முதல் 22-ம் தேதி வரை பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடக்கிறது.

    இந்த விழாவில் மொத்தம் 33 நாடுகளிலிருந்து 49 திரைப்படங்கள் பங்கேற்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்றுகூட இந்தியப் படம் கிடையாது.

    கடந்த ஆண்டுகளில் நிறைய இந்தி மற்றும் தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. தமிழ்ப் படம் வெயில் போன்றவற்றுக்கு விருதுகள் கிடைத்தன. பில்லா போன்ற படங்கள் கேன்ஸுக்கு வெளியே திரையிடப்பட்டன.

    இந்த ஆண்டு விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள் குறித்து விழாவின் இயக்குநர் ஜெனரல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ராபர்ட் டி நீரோ நடுவர் குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.

    விழாவின் முதல்படமாக வூடி ஆலன் நடித்த 'மிட்நைட் இன் பாரிஸ்' படம் திரையிடப்படுகிறது. ஜீன் பியரியின் 'தி கிட் வித் தி பைக்', ஜூலியா லெஹ்யின் 'ஸ்லீப்பிங் பியூட்டி' உள்பட 19 படங்கள் நேரடிப் போட்டிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    English summary
    The 64th Cannes Film Festival, to run from May 11 to 22, will screen 49 features from 33 countries. Forty-four of them will be world premieres, and 19 will compete for the top Palm d’Or, the festival’s most coveted prize. But no Indian film has been selected for this event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X