»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மின்சாரக் கனவு படத்தைத் தொடர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர். பம்பாய் படத்தில் அரவிந்த்சாமி நடித்த ரோலில், இவரை நடிக்க அழைத்தார் இயக்குநர் மணிரத்னம். நடிக்க மறுத்த ராஜீவ் மேனன் அப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற சம்மதித்தார்.

மலையாளத்தில் பாசில் இயக்கிய ஹரிகிருஷ்ணாஸ் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். ராஜீவ் மேனன் தான் தயாரித்து இயக்கும் விளம்பரப் படத்துக்கு தானே இசை அமைத்து பாடவும் செய்கிறார். இவர் மனைவி லதாவும், ஒரு சிறந்த விளம்பரப் பட இயக்குநர் என்பது கூடுதல் தகவல்.

ராஜீவ் மேனனின் அம்மாதான் பிரபல பாடகி கல்யாணி மேனன். அண்மையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கடவுள் வாழ்த்துப் பாடிய அம்மாவை மேடையில் தனக்கு அருகிலேயே உட்கார வைத்துக்கொண்டார் ராஜீவ் மேனன்.

முதல் கேசட்டை கமல்ஹாசன் வெளியிட அதை கல்யாணி மேனன் பெற்றுக் கொண்டார். முதல் கேசட்டை அம்மா பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே மேடையில் தனக்கு அருகிலேயே ராஜீவ் மேனன் உட்கார வைத்துக் கொண்டார் என்ற ரகசியம் அப்போதுதான் வெட்டவெளிச்சமாகியது.

ராஜீவ் மேனனின் தந்தை மேனன், ஒரு கப்பல் படை அதிகாரி. வங்கதேசப் போரில் வீர மரணம்அடைந்தார்.

Read more about: casette, cinema, kamal, kandukondein, release
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil