»   »  கோடி ரூபா கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்!- கின்னஸ் சாதனை பி சுசீலா

கோடி ரூபா கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்!- கின்னஸ் சாதனை பி சுசீலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடி ரூபா கொடுத்தாலும் நான் நடிக்க மட்டும் வரமாட்டேன் என்று கின்னஸ் சாதனைப் படைத்த பாடகி பி சுசீலா கூறினார்.

பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா 17,695 பாடல்கள் பாடியுள்ளார். இசையுலகில் மிகப் பெரிய சாதனையாக இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

P Suseela speaks on his Guinness record

இந்த சாதனையையொட்டி நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பி சுசீலா கூறியதாவது:

"இந்தத் தருணம் எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

முதல் தேசிய விருது எம்.எஸ்.வி இசையில் வெளியான 'நாளை இந்த வேளை பார்த்து' பாட்டுக்குக் கிடைத்தது. பாடல் கம்போஸிங்கின் போதே இந்தப் பாட்டுக்கு உனக்கு விருது கிடைக்கும்னு எம்.எஸ்.வி சொன்னார். அதேபோல கிடைத்தது. எம்.எஸ்.வி இசையமைப்பில் பாடி தேசிய விருது பெற்றது பெரிய மகிழ்ச்சி.

P Suseela speaks on his Guinness record

இயக்குநர் கோபாலகிருஷ்ணன் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் பிறகும் நிறையப் பேர் அழைக்கிறார்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு எப்போதுமே நடிப்பில் பிரியம் இருந்ததில்லை.

இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன்," என்றார் அவர்.

English summary
Guinness record holder P Suseela has met the media on Tuesday and conveyed her wish to continue singing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil