twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    1952 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் 2 படங்களை வீழ்த்தி வந்த பராசக்தி..சுவையான புதுத்தகவல்கள்

    |

    தமிழக திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் 2 பேரில் ஒருவரான சிவாஜி கணேசனை தமிழ் திரையுலகிற்கு தந்த பராசக்தி வெளியாகி 70 வது ஆண்டு இன்று

    முதலில் சிவாஜிக்கு வாய்ப்பில்லை என மறுக்கப்பட்டது, ஆனால் கருணாநிதியின் வலுவான சிபாரிசினால் அவருக்கு இந்த வாய்ப்பு வந்ததாக சொல்வார்கள்.

    பராசக்தி படத்துடன் அதே ஆண்டில் தென்னகத்தின் சூப்பர் ஸ்டார்களின் அத்தனை படங்களும் மோதியது குறிப்பிட வேண்டிய ஒன்று. எம்ஜிஆரின் 2 படங்களும் வெளியானது ஆனால் தோல்வி கண்டது.

    தனுஷ்தான் அடுத்த சிவாஜி, கமல் என்ற கருத்திற்கு நானே வருவேன் தயாரிப்பாளர் தானு தந்த பதில் தெரியுமா?தனுஷ்தான் அடுத்த சிவாஜி, கமல் என்ற கருத்திற்கு நானே வருவேன் தயாரிப்பாளர் தானு தந்த பதில் தெரியுமா?

     தமிழ் திரையுலகின் முத்தான வருகைகள் நடந்த 1950-கள்

    தமிழ் திரையுலகின் முத்தான வருகைகள் நடந்த 1950-கள்

    தமிழ் திரையுலகம் சுதந்திரம் அடைந்த காலத்திற்கு பின் பெரும் மாற்றத்தை சந்தித்தது. 1940 களில் தமிழ் நாடக உலகிலிருந்து திரைப்படமாக மாறிய காலக்கட்டத்தில் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்றவர்கள் பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி.பாகவதர். இவர்கள் தவிர கே.ஆர்.ராமசாமி, ஜெமினி கணேசன், எம்.கே.ராதா, டி.ஆர்.மஹாலிங்கம், என்.டி,ராமாராவ், நாகேஸ்வர ராவ் என பலர் நடித்து வந்தனர். எம்ஜிஆரும் தனக்கான இடத்திற்காக போராடிக்கொண்டிருந்தார்.

     வசனத்தில் வாள்வீச்சு இளங்கோ..கூர்முனை கருணாநிதி

    வசனத்தில் வாள்வீச்சு இளங்கோ..கூர்முனை கருணாநிதி

    1950 களுக்கு பிறகு தமிழ் திரையுலகம் வேறு வகையான மாற்றங்களை அடைந்தது. காதாநாயகன் பாடித்தான் ஆகவேண்டும் என்கிற நிலை மாறி பின்னணி பாடகர்கள் பாட வந்தனர். வசனங்களிலும் மாற்றம் வந்தது. இளங்கோவன் வசனத்தில் எளிய முறையை கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் வசனங்கள் பெரிதாக பேசப்பட்டது. இந்தக்காலக்கட்டத்தில் தான் வசன உச்சரிப்புக்கு பெரிதாக பேசப்பட்ட சிவாஜி கணேசன் உள்ளே நுழைந்தார்.

     அண்ணாவின் ஆஸ்தான ஹீரோ கே.ஆர்.ராமசாமி நடிப்பதாக இருந்த பராசக்தி

    அண்ணாவின் ஆஸ்தான ஹீரோ கே.ஆர்.ராமசாமி நடிப்பதாக இருந்த பராசக்தி

    நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் பராசக்தி என்கிற படத்தை தயாரிக்க நினைத்தது. புகழ்பெற்ற இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் இப்படம் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. கதை வசனம் கருணாநிதி அவர் அதே காலக்கட்டத்தில் பல படங்களுக்கு வாள்வீச்சு வசனங்கள் எழுதி புகழ்பெற்றிருந்தார். இந்தப்படத்தில் திமுகவின் ஆஸ்தான் நடிகரும், அப்போதோதைய நாடக உலகில் புகழ்பெற்று அண்ணாவின் வேலைக்காரி படத்தின் நாயகனாக நடித்து புகழ்பெற்ற கே.ஆர்.ராமசாமி நடிப்பதாக இருந்தது.

     திமுகவின் நாயகன் கே.ஆர்.ராமசாமியை மீறி பராசக்தி ஹீரோ வேஷம்

    திமுகவின் நாயகன் கே.ஆர்.ராமசாமியை மீறி பராசக்தி ஹீரோ வேஷம்

    கே,ஆர்.ராமசாமி சிறந்த சாய்ஸ் என்று நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனமும் கருதியது. அதன்படி கே.ஆர்.ராமசாமியை போட்டிருந்தால் புரட்சிகர வசனம் பேசி ஒரே படத்தில் புகழ்பெற்ற சிவாஜி யாரென தெரியாமல் போயிருக்கும். அல்லது வெகு காலம் கழித்து தன்னை நிரூபித்திருப்பார் சிவாஜி. ஆனால் கதை வசனகர்த்தா கருணாநிதி கணேசன்(சிவாஜிதான்) என்கிற நடிகர் இருக்கிறார் என பலத்த சிபாரிசு செய்து ஆடிஷனுக்கு கலந்துகொள்ள வைத்தார். சரி பார்ப்போம் என்று வேண்டா வெறுப்பாகத்தான் சிவாஜியை அழைத்தனர் பட நிறுவனத்தார்.

     ரூம் மேட் எஸ்.எஸ்.ஆருக்கு மீன் குழம்பு வைத்து கொடுத்து பராசக்தி ஆடிஷனுக்கு சென்ற சிவாஜி

    ரூம் மேட் எஸ்.எஸ்.ஆருக்கு மீன் குழம்பு வைத்து கொடுத்து பராசக்தி ஆடிஷனுக்கு சென்ற சிவாஜி

    சிவாஜி கணேசனுக்கு கதாநாயகன் வேடத்துக்கான நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தபோது, தன்னுடைய ரூம் மேட்டான எஸ்.எஸ்.ஆருடன் இருந்தார். சிவாஜிக்கு அழைப்பு வந்தபோது தன்னுடன் அறையில் இருந்த சிவாஜி அன்று மீன் குழம்பு வைத்தார். மீன் குழம்பு வைப்பதில் சிவாஜி கில்லாடி. அவர் வைத்த மீன் குழம்பை ருசித்து சாப்பிட்டோம். பின்னர் இருவரும் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு சென்றோம், எனக்கும் அப்படத்தில் நடிக்க ஆடிஷன் இருந்தது என்கிறார் எஸ்.எஸ்.ஆர். (எஸ்.எஸ்.ஆர். பராசக்தியில் சிவாஜியின் தம்பியாக நடித்திருப்பார்)

     வட்ட முகம் இல்லை என நிராகரித்த பட நிறுவனத்தார்

    வட்ட முகம் இல்லை என நிராகரித்த பட நிறுவனத்தார்

    ஆடிஷனில் சிவாஜி கணேசனின் கணீர் குரல் வசன உச்சரிப்பு பிடித்து போயிருந்தாலும், கதாநாயகனுக்குரிய வட்ட முகம் இல்லை என நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்தார் கருதியுள்ளனர். (சுந்தர முகத்தோன் சிவாஜிக்கு சிறு வயதில் லேசாக முகம் நீண்டு சதை போடாமல் இருப்பார்) ஆனால் அதை மீறி அவர் நடிக்க வைக்கப்பட்டார். (எம்ஜிஆர் ராஜகுமாரி படத்தில் நடிக்க அழைக்கப்பட்டபோது அவருக்கு இரட்டை நாடி என சொல்லி நிராகரிக்க முயன்றபோது அந்த படத்தின் வசனகர்த்தா கருணாநிதி ஆட்சேபித்து பின்னர் சமரசத்திற்காக எம்ஜிஆருக்கு குறுந்தாடி வைக்கப்பட்டதாக சொல்வார்கள்)

     பராசக்தி மட்டுமல்ல பணம் படமும் முதல் படம் தான்

    பராசக்தி மட்டுமல்ல பணம் படமும் முதல் படம் தான்

    படம் தொடங்கிய அதே காலக்கட்டத்தில் சிவாஜி கணேசனை வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் பணம் என்னும் படத்தை இயக்கினார். இந்தப்படமும் பராசக்தி படத்துடன் ஒன்றாக வளர்ந்து வந்தது. முதல் படமான பராசக்தியில் சிவாஜி கணேசன் நடிக்கும்போதே அவர் அதே ஆண்டில் (1952) பணம் என்னும் படத்திலும் நடித்தார்(அதுவும் கருணாநிதியின் கதை வசனம் தான்). இரண்டு படங்களில் பராசக்தி முதலில் முடிந்து வெளியானதால் பராசக்தி சிவாஜியின் முதல்படம் என அழைக்கப்படுகிறது.

     படத்தின் நாயகி பண்டரிபாய்

    படத்தின் நாயகி பண்டரிபாய்

    பராசக்தி படத்தில் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் சிக்கி சீரழியும் இளைஞன் பாத்திரம். கா..கா.கா என்கிற பாடலும், தேசம் ஞானம் கல்வி என்கிற பாடலும் சி.எஸ்.ஜெயராமன் குரலில் பெயர் வாங்கித்தந்தது, ஓ ரசிக்கும் சீமானே பாடல் அந்தக்கால இளவட்டங்களின் விருப்பப்பாடல் ஆகும். இப்படத்தின் கதாநாயகி பண்டரிபாய் பின்னர் சிவாஜி கணேசனின் பலபடங்களில் கதாநாயகி, தாய் என தொடர்ந்து நடித்தார். கௌரவம் படத்தில் அப்பா சிவாஜிக்கு மனைவி மகன் சிவாஜியை எண்ணி கண்ணா கண்ணா என உருகுவார்.

     1952-ல் பராசக்தியுடன் மோதிய திரைப்படங்கள்

    1952-ல் பராசக்தியுடன் மோதிய திரைப்படங்கள்

    பராசக்தியில் சிவாஜியின் தம்பியாக நடித்த எஸ்.எஸ்.ஆர் பல படங்களில் சிவாஜி கணேசனுடன் நண்பனாக, தம்பியாக நடித்திருப்பார். பராசக்தி படம் வெளிவந்த காலக்கட்டத்தில் அப்போதைய சூப்பர் ஸ்டார் பாகவதரின் அமரகவி, சியாமளா என்கிற படமும், கே.ஆர்.ராமசாமியின் காஞ்சனா, எம்ஜிஆரின் என் தங்கை, குமாரி, ஜெமினி கணேசனின் தாய் உள்ளம், டி.ஆர்.மகாலிங்கத்தின் சின்னதுரை, வேலைக்காரன், சத்யனின் பிரிய்சகி, பிரேம் நசீரின் பசிக்கொடுமை, நாகேஸ்வரராவ் நடித்த காதல், என்.டி ராமாராவின் மாயரம்பை, எம்.கே.ராதா, ஜெமினி நடித்த 3 பிள்ளைகள், எம்.என் நம்பியார் நடித்த கல்யாணம் பண்ணிப்பார் உள்ளிட்ட ஹீரோக்களின் படங்கள் மோதின.

     அறிமுக நாயகன் சிவாஜியுடன் மோதிய தென்னகத்தின் சூப்பர் ஸ்டார்கள்

    அறிமுக நாயகன் சிவாஜியுடன் மோதிய தென்னகத்தின் சூப்பர் ஸ்டார்கள்

    பராசக்தி படத்துடன் தென்னகத்தின் ஹீரோக்கள் மலையாளத்தில் பின்னர் பிரபல ஹீரோக்களாக மாறிய சத்யன், பிரேம் நசீரின் படங்கள், தெலுங்கு திரையுலகில் பின்னர் சூப்பர் ஸ்டார்களாக மாறிய என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் ஆகியோரின் படங்களும், தமிழில் பிரபல கதாநாயகன் பாகவதரின் 2 படங்களும், எம்ஜிஆரின் 2 படங்களும், ஜெமினி, எம்.கே.ராதா, டி.ஆர்.மகாலிங்கத்தின் 2 படங்களும், கே.ஆர்.ராமசாமியின் படமும், ஏன் சிவாஜியின் பணம் படமும் மோதியது. ஆனால் வால்வீச்சு கூர்முனை பகுத்தறிவு வசனங்களால் பராசக்தி பெருவெற்றி பெற்றது.

     பராசக்தியின் பஞ்ச் வசனங்கள்

    பராசக்தியின் பஞ்ச் வசனங்கள்

    "அம்மன் என்றைக்கடா பேசினாள் அறிவுக்கெட்டவனே", "நீங்கள் செய்யும் அநியாயங்களை மறைக்கத்தானே அம்மனுக்கு வெள்ளிக்கண்ணை சாத்துகிறீர்கள்", நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது, கோயில் கூடாதென்று சொல்லவில்லை கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்று சொல்கிறேன், ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள், அங்காவது அவளை வாழவிட்டார்களா? பகட்டு என் தங்கையை விரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையை துரத்தியது. மீண்டு ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். கல்யாணியை கஞ்சிக்கு வழி இல்லாதவளாக அலையவிட்டது யார் குற்றம். விதியின் குற்றமா? அல்லது விதியை சொல்லி வயிர் வளர்க்கும் வீணர்கள் குற்றமா?

     பராசக்தி செய்த மாயம்

    பராசக்தி செய்த மாயம்

    பராசக்தி சிவாஜியின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அவரது அட்சர சுத்த வசன உச்சரிப்பால் தமிழகம் எங்கும் பேசப்பட்டார். எம்ஜிஆர் சமூக படமா? அரசர் படமா என தடுமாறிய நேரம், அவரது சமூக படமான என் தங்கை அதே ஆண்டில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. சிவாஜி கணேசன் இதே காலக்கட்டத்தில் பல சமூக படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகரானார். இரண்டே ஆண்டில் 1954 ஆம் ஆண்டில் கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான மனோகரா படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதுமுதல் தமிழ் சினிமாவில் நடிக்க வருபவர்கள் சிவாஜியின் வசனம் தான் நுழைவுத்தேர்வாக இருந்தது. பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனங்களை பேசினால் மட்டுமே அவர் அங்கிகரிக்கப்பட்டார்.

    English summary
    Today is the 70th anniversary of the release of Parasakthi, which brought Sivaji Ganesan, one of the top 2 stars of the Tamil Nadu film industry, to the Tamil film industry. At first, Shivaji was denied a chance, but Karunanidhi's strong recommendation is said to have given him the chance. It is worth noting that all the films of South superstars clashed with Parashakti in the same year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X