»   »  இனிக்காத பொங்கல் ரிலீஸ்!

இனிக்காத பொங்கல் ரிலீஸ்!

Subscribe to Oneindia Tamil
Trisha with Vikram
பொங்கலுக்கு திரைக்கு வந்த அனைத்துப் படங்களுமே திருப்திகரமான வசூலைத் தரவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

பொங்கலுக்கு விக்ரமின் பீமா, பரத்தின் பழனி, சிம்புவின் காளை, மாதவனின் வாழ்த்துகள், சேரனின் பிரிவோம் சந்திப்போம், அசோக்கின் பிடிச்சிருக்கு ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

ஆனால் ஆறு படங்களுமே வசூலில் சரிவர இல்லை என்று விநியோகஸ்தர்கள் ஏமாற்றமாக உள்ளனராம். குறிப்பாக பீமா, காளை ஆகிய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளனராம்.

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள பீமா, பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே திரைக்கு வந்தது. படத்தைப் பொறுத்தவரை விக்ரம்தான் படு பிரஷ்ஷாக இருக்கிறார். ஆனால் கதையில் எந்தப் புதுமையும் இல்ைல என்று பேச்சு நிலவுகிறது.

இப்படி பல அதிருப்திகள் இருந்தாலும் கூட வெளியான 6 படங்களில் பீமா, வசூலில் முன்னணியில் உள்ளதாம். ஆனால் எதிர்பார்த்த இலக்கை அது இன்னும் எட்டவில்லையாம்.

படத்தால் தயாரிப்பாளருக்கு சந்தோஷம் கிடைத்திருந்தாலும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இதுவரை லாபம் வரவில்லையாம்.

மிகப் பெரிய விலை கொடுத்து படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் போட்ட பணத்ைத எடுக்க முடியுமா என்ற குழப்பத்தில் உள்ளனராம்.

கரு பழனியப்பன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள பிரிவோம் சந்திப்போம், கூட்டுக் குடும்பம் குறித்து செட்டி நாட்டுக் கதை.

சேரன், சினேகாவின் நடிப்பு சிறப்பாக இருந்தும், கதையின் ஓட்டத்தில் பெரும் மந்த கதி இருப்பதால், முதல் பாதிப் படம் மட்டுமே ரசிக்கும்படி இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. இரண்டாவது பாதி சரியில்லை என்ற அதிருப்தி உள்ளது. நகர்ப்புறங்களில் படம் பரவாயில்லை என்று கூறும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் பி செனடர்களில் வரவேற்பு சரியில்லையாம்.

அடுத்த படம் பிடிச்சிருக்கு. இப்படம் குறைந்த முதலீட்டில் வெளியான படம். ஆனால் திருப்தி தரும் வகையில் வசூலை கொடுத்து வருகிறதாம். சாதாரண கதையை வைத்துக் கொண்டு சாதாரணக் கலைஞர்களுடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம்தான், வந்த படங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்த படமாக இருக்கிறதாம்.

நல்ல ஓபனிங் இருந்தாலும் கூட போகப் போகத்தான் போட்ட முதலைத் திருப்பி எடுக்க முடியுமா என்பது தெரியும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

பரத் நடித்த முதல் அதிரடிப் படம் பழனி. படம் முழுக்க இடம் பெற்றுள்ள பன்ச் வசனங்களால் பெஞ்ச் ரசிகர்கள் சந்தோஷமாக படத்தைப் பார்க்கின்றனர். ஆனால் ஹீரோயின் காஜல் அகர்வால் குறித்து ரசிகர்களுக்குத் திருப்தி இல்லை. ஆரம்பத்தில் படத்திற்கு நல்ல ஓபனிங் இருந்தது. ஆனால் இப்போது வரவேற்பு குறைந்து விட்டதாக விநியோகஸ்தர்கள் மட்டத்தில் பேச்சு உள்ளது.

பீமாவுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் வரவேற்கப்பட்ட படம் சிம்புவின் காளை. திமிரு படத்தால் தருண் கோபி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல வல்லவனின் மிகப் பெரும் வெற்றிக்குப் பின்னர் வரும் சிம்பு படம் என்பதால் காளை மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காளை திமிறத் தவறி விட்டது. எதிர்பார்ப்பு பொய்த்து விட்டதால் விநியோகஸ்தர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ஆங்கிலம் கலக்காத வசனங்கள், பாடல்களுடன், மாதவன்-சீமான் இணைந்த 2வது படமான வாழ்த்துகள், நல்ல படமாக அறியப்பட்டுள்ளது. ஆனால் திரைக்கதை வலுவானதாக இல்லை என்ற பேச்சும் எழுந்துள்ளது. 'தம்பி' சீமானிடமிருந்து, அழுத்தம் திருத்தமான படங்களையே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே வாழ்த்துகள் போன்ற மென்மையான படங்கள் அவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இப்படி பொங்கலுக்கு வந்த படங்கழிவ் ஓரிரு படங்கள் ஓரளவுக்கு ஓடிக் கொண்டிருந்தாலும், வசூல் ரீதியாக எந்தப் படமும் விநியோகஸ்தர்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பது கோலிவுட்டின் பரபரப்பு பேச்சாக உள்ளது.

திரைப்படங்கள் டைரக்டர்கள் திருப்திக்காகவா அல்லது விநியோகஸ்தர்கள் திருப்திக்காகவா?. இப்படி ஒரு தலைப்பை வைத்து அடுத்த பொங்கலுக்கு ஏதாவது ஒரு டிவி பட்டிமன்றம் நடத்தலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil