»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் கூத்துப் பட்டறை என்று பெயரிடப்பட்ட படத்தின் பெயர் எல்லாமே டிராமாதான்என்று மாற்றப்பட்டுவிட்டது.

தமிழ் டைரக்டர்கள் எல்லாம் ஆங்கிலப் பெயர்களை வைத்துக் கொண்டிருக்க, கன்னடத்துக்காரரான பிரகாஷ் ராஜ்தனது படத்துக்கு நல்ல தமிழில் பெயரிட்டிருந்தார். ஆனால், யார் போய் என்ன குழப்பினார்களோதெரியவில்லை. பெயரை மற்றவர்கள் போலவே எல்லாமே டிராமா தான் என்று ஆக்கிவிட்டார்.

இதில் ஹீரோயினாக நடிக்கப் போவது நவ்யா நாயர் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். படத்தை இயக்கப்போவது ராதாமோகன்.

தமிழில் இந்தப் படம் தவிர மேலும் இரு படங்களைத் தயாரிக்க பூஜை போட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த மூன்றுபடங்களிலும் வெவ்வேறு வேடங்களில் அவரும் நடிக்கிறார் என்பது துக்கடா செய்தி.

தான் நடிப்பதற்காகத் தான் படமே எடுக்கிறார் என்பது முக்கியமான செய்தி. தமிழில் இப்போது அவருக்கு சான்ஸேஇல்லை. இதனால் தான் அடுத்தடுத்து 3 படங்களை தானே தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

தெலுங்கில் இதே டெக்னிக்கைத் தான் பிரகாஷ் ராஜ் கையாண்டார். அங்கு நிறைய படங்களில் நடித்து நிறையசம்பாதித்தார். பின்னர் சான்ஸ் குறைய ஆரம்பித்தவுடன் தானே படம் எடுத்தார். ஹீரோவாக எல்லாம் நடிக்காமல்வேறு ரோல்களை மட்டும் செய்தார். அந்தப் படங்கள் நல்ல வெற்றி பெற்று பணத்தைக் குவித்தன.

இப்போது அதையே தமிழில் செய்கிறார் பிரகாஷ் ராஜ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil