»   »  தொடரும் ப்ரீத்தி மர்மம்!

தொடரும் ப்ரீத்தி மர்மம்!

Subscribe to Oneindia Tamil

நடிகை ப்ரீத்தி வர்மா காணாமல் போய் இரண்டு வாரங்களைத் தாண்டியும், அவர் என்ன ஆனார், எங்கே இருக்கிறார், யாருடன் இருக்கிறார்என்பதில் பெரும் மர்மம் நிலவி வருகிறது.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு ஷூட்டிங்குக்குத் தாயார் ரம்யாவுடன் சென்ற ப்ரீத்தி அங்கு அம்மாவுக்கு டேக்கா கொடுத்து விட்டு மும்பைக்குத்தப்பிப் போய் விட்டார்.

அவர் முதலில் விந்தியாவின் முன்னாள் காதலர் அருணுடன் சென்றதாக சந்தேகிக்கப்பட்டது. பின்னர் காதலர் விஜய்யின் பெயர் அடிபட்டது.அதுவும் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. அதன் பின்னர் மார்வாடி மகேந்திரனின் பெயர் அடிபட்டது.

3 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி விட்டனர். ஆனால் நாங்கள் ப்ரீத்தியை கடத்திச் செல்லவில்லை என்று 3 பேரும் கூறி விட்டதால்போலீஸார் மண்டை காய்ந்து போயுள்ளனர்.

தன்னை பெற்றோர் இருவரும் விபச்சாரத்தில் தள்ளியதாக கடிதம் எழுதியிருந்தார் ப்ரீத்தி. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்றுப்ரீத்தியின் தந்தை பரத்குமாரும், ரம்யாவும் கூறி விட்டனர். மேலும் தங்களை அசிங்கப்படுத்தி விட்ட ப்ரீத்திக்குத் தலைமுழுகுவதாக கூறிபோட்டோவுக்கு மாலை போட்டு ‘காரியத்தையும்‘ முடித்து விட்டனர்.

தற்போது ப்ரீத்தி விவகாரம் படு குழப்பமாக இருக்கிறது. அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரது செல்போன் தொடர்ந்து ஆப்செய்யப்பட்ட நிலையில் இருக்கிறது.

ப்ரீத்தி தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் அவரைப் புக் செய்த தயாரிப்பாளர்கள் கடுப்பாகியுள்ளனர். தமிழில் மூன்றாம் பவுர்ணமி,காதலுக்குத் தலைவணங்கு, தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படம் தொங்கிக் கிடக்கிறதாம்.

ப்ரீத்தியை உடனடியாக வரவழையுங்கள், இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று ப்ரீத்தியின் பெற்றோரை தயாரிப்பாளர்கள் நெருக்கிவருகிறார்களாம். இதனால் ரம்யாவும், பரத்குமாரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ப்ரீத்தி வர்மா, பெரும் மர்மமாக மாறியுள்ளதால் அவரை புக் செய்த தயாரிப்பாளர்கள் வேறு நடிகையைப் போட்டு படத்தை முடிக்கலாமா என்றயோசனையிலும் உள்ளார்களாம்.

தமிழில் காதலே ஜெயம், வீரண்ணா, நீ மட்டும், கலக்குற சந்துரு என பல படங்களில் நடித்துள்ள ப்ரீத்தி தற்போது அன்புத்தோழி (திருமாவளவன்படம் இது), பதினெட்டு வயசு புயலே ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

எங்கம்மா போன ப்ரீத்தி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil