»   »  ப்ரீத்தி நாளை ரிலீஸ்

ப்ரீத்தி நாளை ரிலீஸ்

Subscribe to Oneindia Tamil

காதலரை மணந்து செட்டிலாகி விட்டதாக கூறப்படும் நடிகை ப்ரீத்தி வர்மா நாளை சென்னை திரும்பி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடையவுள்ளார்.

தெலுங்குப் படப்பிடிப்புக்காக ராஜமுந்திரிக்குப் போன ப்ரீத்தி வர்மா அங்கிருந்து அப்படியே அப்பீட் ஆகி விட்டார். என்ன ஆனார், எங்கு போனார் என்று தெரியாமல், புரியாமல் ப்ரீத்தியைப் பெற்றவர்களும், காவல்துறையினரும், அப்பாவி தமிழ் மக்களும் புலம்பிக் கொண்டிருந்தனர்.

ப்ரீத்தி மாயம் குறித்து அடுக்கடுக்காக பல்வேறு தகவல்கள் வெளியாகி மண்டை குழம்ப வைத்தது. திடீரென ப்ரீத்தி காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், தனது பெற்றோர் தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்திக் கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதை ப்ரீத்தியின் பெற்றோர் மறுத்தனர்.

தங்களை அவமானப்படுத்தி விட்ட ப்ரீத்தி மகளே கிடையாது என்று கூறி எள்ளும் தண்ணீரும் தெளித்து காரியத்தை செய்து ப்ரீத்தியை தலைமுழுகி விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் ப்ரீத்தி. அதில் நான் சென்னை வர விரும்புகிறேன். எனது பெற்றோரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் ப்ரீத்தி நேரில் ஆஜராக வேண்டும். அவருக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ப்ரீத்தி வர்மா நாளை எழும்பூர் தலைைம பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

இதுகுறித்து தலைமறைவாக உள்ள ப்ரீத்தி போன் மூலம் கூறுகையில்,

எனது பெற்றோருக்கு பயந்து தான் இதுநாள் வரை தலைமறைவாக இருந்தேன்.

உயர்நீதிமன்ற அறிவுரைப்படி, எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை ஆஜர் ஆகிறேன். அதன் பின்னர் எனது நிலையை தெரிவிப்பேன். நடித்து முடிவடையாமல் இருக்கும் படங்களையும் முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் ப்ரீத்தி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil