»   »  கோர்ட்டுக்கு வந்தார் ப்ரீத்தி வர்மா!

கோர்ட்டுக்கு வந்தார் ப்ரீத்தி வர்மா!

Subscribe to Oneindia Tamil

2 மாத காலமாக தலைமறைவாக இருந்து வந்த நடிகை ப்ரீத்தி வர்மா இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ேநரில் ஆஜரானார். அவர் வீட்டுக்கு வர மறுத்து விட்டதால், ப்ரீத்தியின் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா ஆகியோர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறினர்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு தெலுங்குப் படப்பிடிப்புக்காக போன இடத்திலிருந்து ப்ரீத்தி வர்மா காணாமல் போனார். அவர் கடத்தப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக பலரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கே.கே.நகர் போலீஸாருக்கு ப்ரீத்தி வர்மா கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் தனது பெற்றோர் விபச்சாரத்தில் ஈடுபடுத்திக் கொடுமை செய்வதாகவும், அதனால்தான் தான் தலைமறைவாகி விட்டதாகவும் ெதரிவித்திருந்தார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும், ப்ரீத்தி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தான் சென்னை வர விரும்புவதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் சென்னை வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும், அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறைக்கும் உத்தரவிட்டது.

அதன்படி இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்துக்கு தனது வக்கீல்களுடன் ப்ரீத்தி வர்மா வந்தார். அவரைக் காண நீதிமன்ற வளாகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பத்திரிக்கையாளர்களும் பெருமளவில் கூடியிருந்தனர்.

நீதிமன்றத்தில் ேநரில் ஆஜரான ப்ரீத்தி வர்மா அவரிடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்து வாக்குமூலம் அளித்தார். அப்போது, எனது பெற்ேறார் பாலியல் தொழிலில் என்னை ஈடுபடுத்த முயற்சிக்கின்றனர். எனவே அவர்களுடன் வாழ நான் விரும்பவில்லை.

நான் மேஜர் பெண். எனவே தனியாக வசிக்க என்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார் ப்ரீத்தி. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவர் தனியாக வசிக்க அனுமதித்தார். மேலும் தான் தங்கியுள்ள முகவரியை காவல்துறை ஆணையரிடம் வழங்க வேண்டும் என்றும், அதன் பின்னர் உரிய முறையில் விண்ணப்பித்து போலீஸ் பாதுகாப்பு பெறலாம் எனவும் உத்தரவிட்டார்.

பின்னர் வெளியே வந்த ப்ரீத்தி வர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை யாரும் கடத்தவில்லை. நான் இப்போது சந்தோஷமாகவே இருக்கிறேன். தனியாகவே வசிக்கப் போகிறேன். இதுவரை யாரையும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. காதலர்கள் யாரும் எனக்கு இல்லை.

சென்னையில்தான் தொடர்ந்து தங்கியிருப்பேன். கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விடுவேன் என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ப்ரீத்தி.

கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த ப்ரீத்தியை அவரது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, தம்பி ஆகியோர் சுற்றிக் கொண்டு தங்களுடன் வந்து விடுமாறு கோரினர். ஆனால் அவர்களுடன் பேசக் கூட மறுத்து விட்ட ப்ரீத்தி காரில் ஏறிப் போய் விட்டார்.

இதனால் அனைவரும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறி அழுதபடி அங்கிருந்து சென்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil