»   »  நடிகை ப்ரீத்தி ஜிந்தா ரகசிய திருமணம்... அமெரிக்க காதலனை மணந்தார்!

நடிகை ப்ரீத்தி ஜிந்தா ரகசிய திருமணம்... அமெரிக்க காதலனை மணந்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை பிரீத்தி ஜிந்தா தன்னுடைய அமெரிக்க காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் உள்ளார் ப்ரீத்தி.

Preity Zinta, Gene Goodenough are married

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், தன்னுடைய தொழில் கூட்டாளியுமான நெஸ் வாடியாவுக்கும், பிரீத்தி ஜிந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த ஜெனி குட்எனப் என்பவருக்கும் ப்ரீத்திக்கும் காதல் மலர்ந்தது. ஆனாலும் இந்தக் காதல் குறித்து ரகசியம் காத்து வந்தார் ப்ரீத்தி.

இந்த நிலையில், அவர் ஜெனி குட்எனப்பை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டார். எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய தோழியும், ஆடை வடிவமைப்பாளரும் ஆன பராகான் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தகவலை பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பரும், இந்தி நடிகருமான கபிர் பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சக நடிகையான சுஷ்மிதா சென் இந்த திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English summary
Actress Preity Zinta has finally tied the knot with her US based boyfriend and fiance Gene Goodenough. The actress has been in LA preparing for this big day along with her close friends.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil