»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாக்யராஜின் பள்ளியிலிருந்து மற்றுமொரு இயக்குநராக எஸ்.கே. சாமி களத்தில் குதிக்கிறார். புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து இவர்இயக்கும் படம் "வரப்போகும் சூரியனே.

தமிழ் திரை உலகில் திரைக்கதை அமைப்பதில் கில்லாடி என்று பெயர் பெற்றவர் கே. பாக்யராஜ். ஒரு காலத்தில் திரைக்கதை அமைத்துதரும்படி பாலிவுட்டே பாக்யராஜைத் தேடி வந்தது.

பாக்யராஜைப் போலவே அவரது சீடர்களும் சினிமாவில் சோடை போனதில்லை. பார்த்திபன், பாண்டியராஜன் உட்பட பலர் தமிழ் திரைஉலகில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள்.

இவர்களது வரிசையில் இப்போது அடுத்ததாக வந்திருப்பவர் எஸ்.கே. சாமி. இவர் பாக்யராஜிடம் மட்டுமில்லாமல் விக்ரமன், வி.சேகர்,அர்ஜூன் ஆகியோரிடமும் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

தலைசிறந்த இயக்குனர்களிடம் பெற்ற தனது அனுபவத்தை வைத்து இவர் இயக்கும் முதல் படம் தான், திவ்ய ஷேத்ரா பிலிம்ஸ் சார்பில்சி.ஆர் ராஜன் தயாரிக்கும் "வரப்போகும் சூரியனே.

இந்தப் படத்தில் கதாநாயகனாக திருவிக்ரம் என்பவர் அறிமுகமாகிறார். கதாநாயகி பிரியாஞ்சலி புதுமுகம்தான். இவர் ஆந்திராவைச்சேர்ந்தவர்.

இவர்களுடன் சீதா, துரைப்பாண்டி, அஞ்சலிதேவி, சத்தியப்பிரியா, ரமேஷ்கண்ணா, கடுகு ராமமுர்த்தி, செம்புலி ஜெகன், கோபி, கவுதமி,தேவன், நம்பிராஜன், பாலு ஆனந்த், அஜய்ரத்தினம், ஆகுதி பிரசாத், திவ்யா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் எஸ்.கே.சாமி. தேனிசைத்தென்றல் தேவா இசையமைக்க, பாடல்களை பா.விஜய்,சினேகன், கலைக்குமார், விஜய்சாகர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவை அகிலன் கவனிக்க, சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன் அமைத்துள்ளார்.

ஒவ்வொரு தந்தையும் தனது மகனை எப்படி வளர்க்க வேண்டும் ? ஒவ்வொரு மகனும் தனது தந்தையை எப்படி மதிக்க வேண்டும் ? என்றகருத்தை மையமாக வைத்துத் தான் இந்தப்படம் தயாராகிறது.

பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் வேகமாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்களைக் கவரும் விதத்தில் காதல், நகைச்சுவை, குடும்பப்பாசம் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்படும் இப்படம்விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Read more about: cinema priyanjali tamil film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil