For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்...

  இந்தப் பாடலுக்கு தக்னூண்டு உடையில் ரகஸ்யா போட்ட அனல் ஆட்டத்துக்கு தியேட்டர்களில் விசில்பறக்கிறது. எல்லா தமிழ் டிவி சேனல்களிலும் டாப் டென்னில் முதல் பாடலும் இது தான்.

  விடுவார்களா நம்மவர்கள்? ரகஸ்யாவை நோக்கி படையெடுக்கும் தயாரிப்புப் பார்ட்டிகளின் எண்ணிக்கைநாளுக்கு நாள் கணிசமான அளவுக்கு ஏறிக் கொண்டிருக்கிறது.

  சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் நடிக்கத் தான் முதலில் ரகஸ்யாவை மும்பையில் இருந்து கூட்டி வந்தார்கள்.ஆனால், படம் பேசப்படாததால் ரகஸ்யாவும் கண்டு கொள்ளப்படவில்லை. திரும்பி மும்பைக்கே போன ரகஸ்யா,தனது துணை நடிகை வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்தார்.

  வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்சில் சீனா தானா டோய் மூலம் ரகஸ்யாவை மீண்டும் களத்தில் இறக்கிவிட்டார் இயக்குனர்சரண். பாடல் எக்குதப்பான ஹிட் ஆகிவிட, இப்போது ரகஸ்யா ஏக பிஸி.

  மும்பை துணை நடிகையாக, திரையுலகை முற்றும் அறிந்த ரகஸ்யாவுக்கு சீனா தானா பாடலுக்கு ஆட தரப்பட்டசம்பளம் 2 லட்சம். பாட்டுக்கு இவர் போட்ட துள்ளல் ஆட்டமும், அந்தப் பாடலில் இவர் வீணை வாசித்த அழகும்(டான்ஸ் மாஸ்டர் தினேஷ் உபயத்தில்..) கோடம்பாக்கத்தை கிடுகிடுக்க வைத்துவிட்டன.

  மும்தாஜ் டான்ஸ் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என ஒரு காலத்தில் அடம் பிடித்தவினியோகஸ்தர்கள், இப்போது ரகஸ்யாவின் குத்தாட்டம் ஒன்றையும் சேர்த்துத் தருமாறு கோரிக்கை வைத்தஆரம்பித்துவிட்டனர்.

  இதனால் ஜெயம் ரவி நடித்த எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு,ரகஸ்யாவை 3 லட்ச ரூபாய் கொடுத்து, கூட்டி வந்து ஒரு டான்ஸைப் போட வைத்து, படத்தில் சேர்த்து சுட சுட நல்லவிலைக்கு விற்றுள்ளார்கள்.

  இப்படி பல பக்கத்தில் இருந்தும் சிறுக்கி சிறுக்கி மக சீனா தானா ரக டான்ஸ் போடச் சொல்லி ரகஸ்யாவுக்குநச்சரிப்புகள். தனுஷ் நடிக்கும் தேவதையைக் கண்டேன் படத்தில் வழக்கமான தனுஷ் ஆட்டத்துக்கும்ரகஸ்யாவை புக் செய்துள்ளார்கள்.

  சரத்குமார் நடிக்கும் சத்ரபதி படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடச் சொல்லி அழைத்திருக்கிறார்கள்.

  இப்படி ஏகப்பட்ட வாய்ப்புக்களால் கால்ஷீட் புக் நிரம்பி வழிவதை உணர்ந்த ரகஸ்யா இப்போது வசூல் ராணியாகமாறிவிட்டார்.

  இரண்டு மாதத்துக்கு முன் ஒரு பாட்டுக்கு ரூ. 2 லட்சம் வாங்கியவர், இப்போதுஅமுக்கு ஆட்டம் போட ரூ. 7 லட்சம்கேட்கிறார்.

  இது தெரியாமல், 3 லட்சம் தர்றோம்.. இந்தாம்மா அட்வான்ஸ் 50,000 ரூபா என்று காசை நீட்டிய ஒருதயாரிப்பாளரின் மேனேஜர் முகத்தில் அந்தப் பணம் திரும்பி வந்து விழுந்ததாம். காசைத் தூக்கிப் போட்ட ரகஸ்யாஅவரை அடிக்காத குறையாக விரட்டி விட்டுள்ளார்.

  பிரஷாந்தை வைத்து போலீஸ் என்ற படத்தைத் தயாரிக்கும் தியாகராஜன், படத்தில் ரகஸ்யா இருந்தா நல்லதாச்சேஎன்று நினைத்து அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார். அப்போது ரகஸ்யா கேட்ட சம்பளத்தால் நடுங்கிப் போனதியாகராஜன் சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி ஓடி வந்திருக்கிறார்.

  திரும்ப வந்த கையோடு, மும்பைக்கு போனைப் போட்டு லாரா தத்தாவை ஒரு பாட்டுக்கு ஆட புக்செய்துவிட்டாராம் தியாகராஜன். இதற்கு, உலக அழகி லாரா கேட்ட தொகை ரகஸ்யா கேட்டதில் 3ல் ஒருபங்குதானாம்.

  பி.கு: பெரிய சைஸ் டிரஸ் கொடுத்தால் கோபப் பார்வை பார்த்து தூக்கி எறியும் ரகஸ்யா, தன்னை தூக்கிக்காட்டும் சின்ன சைஸ் டிரஸ்களை தானே வடிவமைத்துக் கொள்கிறாராம். அதைத் தான் படத்திலும் யூஸ்செய்கிறாராம்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X