»   »  பாட்ஷாவுடன் மீண்டும் ரகுவரன்

பாட்ஷாவுடன் மீண்டும் ரகுவரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி படங்களில் தப்பாமல், தவறாமல் இடம் பிடித்து விடும் தென்னிந்தியாவின் அல் பசினோ ரகுவரன், நீண்டஇடைவெளிக்குப் பிறகு சிவாஜியில் ரஜினியுடன் இணைகிறார்.

ரஜினியுடன் நிறையப் படங்களில் நடித்தவர் ரகுவரன். நண்பனாக, எதிரியாக பல ரூபங்களில் ரஜினி படங்களில்இடம் பிடித்து வந்தவர் ரகுவரன். கடைசியாக அவர் ரஜினியுடன் நடித்தது அருணாச்சலம்படத்தில்தான். அதற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இப்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ரகுவரனுக்கு வந்துள்ளது. அதுவும் அமிதாப் பச்சன்புண்ணியத்தில். அதாவது சிவாஜி படத்தில் ரஜினியின் பாஸ் வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனை முடிவுசெய்தார்கள் ரஜினியும், ஷங்கரும். இதற்காக அமிதாப்பையும் அணுகினர்.

முதலில் சரி என்று அமிதாப்பும் சம்மதித்திருந்தார். ஆனால் அந்த சமயம் பார்த்து அவருக்கு உடல் நலம்சரியில்லாமல் போய் விட்டது. இதனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. தற்போது அமிதாப் உடல் நலம்தேறிவிட்டாலும் இந்தியில் பிஸியாக இருக்கிறார். அடுத்த 6 மாதத்துக்கு அவரிடம் கால்ஷீட் இல்லையாம்.இதனால் அந்த வேடத்தில் அமிதாப் நடிக்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

எனவே அமிதாப்புக்குப் பதில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு வந்தபோது ரகுவரனைபரிந்துரைத்துள்ளார் ரஜினி. ஷங்கருக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. அவரது முதல்வன் படத்தில்முதலமைச்சர் கேரக்டரில் வந்து வெளுத்து வாங்கியிருந்தார் ரகுவரன்.

இதையடுத்து இப்போது அமிதாப் நடிக்கவிருந்த கேரக்டரில் ரகுவரன் நடிக்கவுள்ளாராம். ரகுவரன் சம்பந்தப்பட்டகாட்சி கிளைமேக்ஸ் காட்சி என்பதால் இந்தக் காட்சியை படு வித்தியாசமாகவும், அனைவரும் பேசும்படியாகவும்எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக புதிய கெட்டப்பில் நடிக்கிறார் ரகுவரன். இதற்காக மும்பையிலிருந்து மேக்கப்மேன்களை வரவழைத்துமேக்கப் போடுகின்றனர். இதைத் தொடர்ந்து புனே நகரில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன.

சமீப காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ரகுவரனுக்கு இப்போது மீண்டும் பிஸியாகிவிட்டார். விக்ரமின்பீமா படத்திலும், மம்தா-விஷால் நடிக்கும் சிவப்பதிகாரம் படத்திலும் ரகுவரன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் வந்திருக்கிறது ரஜினியின் பட வாய்ப்பு.

பீமாவில் ரகுவரனுக்கு தாதா வேஷமாம். பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

சிவாஜி படத்தில் நீண்ட காலத்துக்குப் பின் சுமன் தமிழில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பாடலுக்கு நயனதாராகும் ஆட்டம் போட்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil