»   »  உடம்பு எப்படி இருக்கு?

உடம்பு எப்படி இருக்கு?

Subscribe to Oneindia Tamil

டாக்டர் ராஜசேகர் மீண்டும் தமிழுக்கு வருகிறார். அவர் தயாரித்து, நடித்த எவடத்தே நக்கேண்டி படம் உடம்பு எப்படி இருக்கு என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

வித்தியாசமான படத் தலைப்புக்குப் பெயர் போனவர் டாக்டர் ராஜசேகர்.

மதுரைக்கார டாக்டரான இந்த நடிகர் நடித்த தெலுங்குப் படம் தமிழில் டப் ஆகி வந்தபோது அந்தப் படத்துக்கு இதுதாண்டா போலிஸ் என்று பெயர் வைத்தபோது படம் ஹிட் ஆனதோ இல்லையோ, டைட்டில் செம பிக்கப் ஆகி அமர்க்களப்படுத்தியது.

அந்த வரிசையில் இப்போதும் செமையான டைட்டிலுடன் மறு வருகை புரிகிறார் டாக்டர் ராஜேசகர். உடம்பு எப்படி இருக்கு ஒரு குடும்பப் படம். அதாவது, ராஜசேகரின் மனைவி ஜீவிதா இயக்க, ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள்கள் ஷிவானி, சிவாத்மிகா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ராஜசேகர்தான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். தம்பியும், நடிகருமான செல்வா வசனம் எழுதியுள்ளார். அப்படீன்னா இது குடும்பப் படம்தானே.

படப்பிடிப்பு ஆரம்பமாகி விட்டது. தெலுங்கு ஒரிஜினலை ஜீவிதாவும், சமுத்ராவும் சேர்ந்து இயக்கியிருந்தனர். படம் அங்கு சூப்பர் ஹிட். அதே கதையை இப்போது தமிழுக்கும் கொண்டு வருகிறார்கள்.

அரசியலுக்கு இளைஞர்கள் நிறைய வர வேண்டும். அங்கு அசுத்தமடைந்திருக்கும் சூழலை துடைத்து அதற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதையாம்.

அரசியல் களம்தான் படத்தின் கதைக்களம் என்பதால் படத்தில் அடிதடி, அடாவடிக்குப் பஞ்சம் இருக்காது என நம்பலாம். படத்தில் இன்னொரு முக்கிய விஷயமும் உண்டு. அதாவது கவர்ச்சி இமயம் முமைத்கானின் காரசார ஆட்டமும் படத்தில் இருக்கிறதாம்.

அடிச்சுத், துவைத்து அதகளப்படுத்துங்க ராசா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil