»   »  வருகிறார் குறளரசன்!

வருகிறார் குறளரசன்!

Subscribe to Oneindia Tamil


சிம்புவைத் தொடர்ந்து அடுத்து தனது இளைய மகன் குறள் என்ற குறளரசனை நாயகனாக்குகிறார் அஷ்டாவதானி விஜய டி.ராஜேந்தர்.

Click here for more images

திரையுலகில் புதிய பாதை அமைத்த பிதாமகன்களில் முக்கியமானவர் விஜய டி.ராஜேந்தர். கல்லூரிக் காதல் கதைகளில் தனித்துவத்தையும், தத்துவத்தையும் கலந்து உருக்கியவர் ராஜேந்தர்.

அவரது படங்களில் கதையும் பேசப்படும், பாடல்களும் பேசப்படும், கதாபாத்திரங்களும் பேசப்படுவார்கள். கதை முதல் கலை வரை, இசை முதல் இயக்கம் வரை பல துறைகளைத் தொட்டு பட்டையைக் கிளப்பியவர் ராஜேந்தர்.

தன்னைப் போலவே தனது மகன் சிலம்பரசனையும் பல துறை சாதனையாளராக மாற்றி சாதனை படைத்துள்ளார் ராஜேந்தர். சிறு வயதிலேயே கலக்கல் நடிப்பைக் கொட்டிய சிம்பு இன்று தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் முக்கிய இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

நடிகராக, நல்ல டான்சராக, கதாசிரியராக, இயக்குநராக பல துறைகளிலும் பரிமளித்து வரும் சிம்பு, மிகவும் இளம் வயதிலேயே இயக்குநராகி பெரிய சாதனையும் படைத்தவர்.

இந்த வரிசையில் ராஜேந்தர் அடுத்து தனது இளைய மகன் குறளரசனையும் களம் இறக்குகிறார். தற்போது கருப்பண்ணன் காதலி என்ற படத்தை உருவாக்கி வருகிறார் ராஜேந்தர்.

இந்தப் படத்தை முடித்து விட்டு அடுத்து குறளை வைத்து புதிய படத்தை இயக்கப் போகிறார். இதுகுறித்து ராஜேந்தர் கூறுகையில், இப்படத்தில் சிம்புவும் இருக்கிறார். அட்டகாசமான ஒரு கேரக்டரைச் செய்யவுள்ளார்.

குறளரசன் அறிமுகமாகும் படம் திரையுலகையே கலக்கப் போகிறது. உயிருள்ளவரை உஷாவைப் போல இந்தப் படமும் காலம் கடந்தும் பேசப்படும். அந்த அளவுக்கு பிரமாண்டமாகக் கொடுக்கப் போகிறேன்.

எனது மூத்த மகன் சிலம்பரசன் ஏற்கனவே சாதனையின் உச்சத்திற்குப் போய் விட்டார். எனவே இளைய மகனையும் அறிமுகப்படுத்த இதுவே சரியான நேரம் என்று முடிவெடுத்துள்ளேன்.

குறளரசனுக்கு சினிமா புதிதல்ல. ஏற்கனவே சிறு வயதிலேயே தனது திறமையை அவன் பறை சாற்றி விட்டான்.

கருப்பண்ணன் காதலி படத்தில் நல்லதையே செய்யும் கருப்பண்ணன் கேரக்டரில் நான் வருகிறேன். முன்னணி நாயகி உடன் நடிக்கிறார். ரொமான்டிக் படமாக மட்டுமல்லாமல் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் படத்தில் நிறைந்திருக்கும். கூடவே சமூகத்திற்குத் தேவையான நல்ல செய்தியையும் வைத்துள்ளேன் என்றார் உற்சாகம் குறையாத குரலில்.

எப்பவுமே அசத்துவாரு டி.ஆரு!
அவருடைய அறிமுகங்கள் எல்லாமே டக்கரு!!
அவருக்கு யாருமே வைக்க முடியாது ஆக்கரு!!!

Read more about: kuralarasan, simbu, trajendhar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil