»   »  ரஜினி-கமலை அசத்திய பாரதிராஜா

ரஜினி-கமலை அசத்திய பாரதிராஜா

Subscribe to Oneindia Tamil

பாரதிராஜா இயக்கியுள்ள பொம்மலாட்டம் படத்தை ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பார்த்துப் பாராட்டித் தள்ளிவிட்டார்களாம்.

16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்தவர் பாரதிராஜா. தற்போது ஒரு இடைவெளி விட்டு தனது 39வது படமாக பொம்மலாட்டத்தை இழைத்து இழைத்து உருவாக்கியுள்ளார் பாரதிராஜா.

தமிழ், இந்தி என 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. நானா படேகர் கதாநாயகனாக நடிக்க, அர்ஜூன் சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார். காஜல் அகர்வால், ராகினி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

நானா படேகர் சொந்த குரலில் தமிழில் வசனம் பேசி தூள் கிளப்பியுள்ளாராம்.

ஒரு சினிமா டைரக்டரை பற்றிய கதை தான் பொம்மலாட்டம். இந்த படத்தை முதலில் இந்தியில் மட்டும் தயாரிக்க முடிவு செய்த பாரதிராஜா பின்னர் அதை தமிழிலும் எடுத்தார்.

ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தை தனது நண்பர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார் பாரதிராஜா.

இருவரும் படத்தைப் பார்த்து அசந்து போய், பாராட்டித் தள்ளி விட்டார்களாம். இப்படத்தைத் தொடர்ந்து தனது நீண்ட நாள் கனவான குற்றப் பரம்பரையை கையில் எடுக்கிறார் பாரதி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil