twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜப்பானிலிருந்து வந்த ரசிகையைச் சந்தித்த சூப்பர் ஸ்டார்!

    By Shankar
    |

    சென்னை: தன்னைப் பார்க்க ஜப்பானிலிருந்து வந்த க்யோகா என்ற ரசிகையைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

    தங்கள் தலைவர் ரஜினியை ஒரே ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும். முடிந்தால் அவருடன் கைகுலுக்கி ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் தலையாய கனவு என்றால் மிகையல்ல.

    இதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எத்தனை தூரத்தையும் கடந்து வரத் தயாராக உள்ளனர்.

    வாரா வாரம்...

    வாரா வாரம்...

    எண்பதுகளில் அவரை எளிதில் சந்திக்க முடிந்தது ரசிகர்களால். அவரும் வாரம் ஒரு முறை ஞாயிற்றுக் கிழமை முழுக்க ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்து அவர் செலவிலேயே அனைவருக்கும் அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    95லிருந்து...

    95லிருந்து...

    1995-ம் ஆண்டுக்குப் பிறகு ரஜினி தன் ரசிகர்களைச் சந்திப்பதில் நிறைய சிக்கல்கள். பாதுகாப்புப் பிரச்சினை ஒருபக்கம்... அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு என்ற பெயரில் போயஸ் தோட்டத்துக்குள் செய்த கெடுபிடிகள் போன்ற காரணங்களால் ரசிகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்ததோடு, தன்னைப் பார்க்க சென்னை வந்து யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.

    ராகவேந்திரா மண்டபத்தில்...

    ராகவேந்திரா மண்டபத்தில்...

    அப்படியும் பிடிவாதமாக சென்னை வந்த ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல் அவ்வப்போது ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி.

    வெளிநாட்டு ரசிகர்கள்

    வெளிநாட்டு ரசிகர்கள்

    ரஜினிக்கு தமிழகத்திலிருப்பதைவிட இருமடங்கு ரசிகர்கள் உலகம் முழுவதும் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவித்திருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் இவர்களுக்கும் ஒரே ஆசை ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற வேண்டும் என்பதுதான். அவர் எப்போதாவது வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்காகப் போனால், அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே போய் சந்தித்து படம் எடுத்துக் கொள்வது ரசிகர்கள் வழக்கம்.

    ஜப்பான் ரசிகர்கள்..

    ஜப்பான் ரசிகர்கள்..

    ஜப்பானில் ரஜினியைத் தெரியாதவர்களே இல்லை எனும் அளவுக்கு அத்தனை பிரபலம் ரஜினி. தமிழகத்தைப் போலவே ரஜினியைக் கொண்டாடுகின்றனர் ஜப்பான் ரசிகர்கள். ஏராளமான ரசிகர்கள் அவரைச் சந்திக்க போயஸ் தோட்டத்துக்கும் மண்டபத்துக்கும் வருகின்றனர் ஜப்பானிலிருந்து.

    அதிர்ஷ்டசாலிகள்

    அதிர்ஷ்டசாலிகள்

    அப்படி வருபவர்களில் அதிர்ஷ்டசாலிகள் சிலருக்கு அவரை உடனே நேரில் பார்த்து பேசி படமெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. சிலருக்கு கிடைப்பதில்லை. ஆனாலும் அவர் வீட்டு முன்பு நின்று படமெடுத்துக் கொண்ட ஜப்பான் ரசிகர்களைப் பார்த்திருக்கிறோம்.

    2013 ரசிகர்கள் ஆண்டு

    2013 ரசிகர்கள் ஆண்டு

    இந்த ஆண்டு ரசிகர்கள் ஆண்டு என முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. விஐபி ரசிகரிலிருந்து சாதாரண ரசிகர் வரை யாரையும் ஏமாற்றாமல், வருகிற அத்தனை பேரையும் சந்தித்து வாழ்த்தி வருகிறார். அப்படி வந்தவர்தான் ஜப்பானைச் சேர்ந்த கியோகா.

    கடந்த புத்தாண்டு அன்று தன்னைப் பார்க்க வந்த கியோகவை அன்புடன் வரவேற்ற சூப்பர் ஸ்டார் புகைப்படம் எடுத்துக் கொண்டு வாழ்த்து கூறியதோடு, ஜப்பான் மக்களைப் பார்க்க தாமே அங்கு வரப் போவதாகவும் கூறினாராம்!

    Read more about: rajini ரஜினி
    English summary
    Super star Rajinikanth met his Japanese fan Kyoka on New year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X