விஜய் படங்களில் இதனால்தான் நடிப்பதில்லை... நண்பர் சஞ்சீவ் பேட்டி

சென்னை: நடிகர் விஜய் தற்சமயம் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படும் நடிகர் சஞ்சீவ் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் சுவாரசியமான விஷயங்களை கூறியுள்ளார்.

இன்றைய நடிகரும் போட்டி

இன்றைய நடிகரும் போட்டி

இப்போது ஒரு நடிகர் அறிமுகமானாலும் அவரை போட்டியாக நினைப்பாராம் விஜய். ஒரு முறை ஒரு புதிய நடிகரின் படம் வெளியாக இருந்த நிலையில் நாளை போட்டிக்கு இன்னொரு நடிகர் வருகிறார் என்று விஜய் சஞ்சீவிடம் கூறினார். ஏன் அப்படி சொல்கிறாய் என்று கேட்கையில், ஆம் அப்படி வரும் புது நடிகருடனும் போட்டி போட்டுதான் ஆக வேண்டும். அப்போதுதான் நாமும் ஓடிக் கொண்டே இருப்போம் என்று விஜய் கூறினாராம். என்னதான் தளபதி என்ற அந்தஸ்தில் இருந்தாலும் சிறிய நடிகர் பெரிய நடிகர் என்று பார்க்காமல் போட்டி போட்டு நடிக்க கூடியவர் விஜய் என்று பெருமையாக கூறியுள்ளார் சஞ்சய்.

இருந்தாலும் படபடப்பு

இருந்தாலும் படபடப்பு

என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தனது படங்கள் வெளிவரும்போது சிக்கல்களை சந்தித்த விஜய், ஜில்லா படத்தின் ரிலீசின் போது பதட்டமாக காணப்பட்டாராம். திரையரங்கில் ஜில்லா ஜில்லா என்ற பாடலை கேட்கும் வரையில் அந்த பதட்டம் விஜய்க்கு ஓயவில்லையாம். ஏனென்றால் அப்போது அவருடைய ஒவ்வொரு படத்திற்கும் பலவிதமான சிக்கல்கள் வந்துள்ளது. ஒரு முன்னணி நடிகராக இருப்பதில் இப்படி கஷ்டங்கள் கூட நமக்கு வரும் என்று சஞ்சீவ் கூறியுள்ளார்.

சாப்பாட்டு பிரியர் சஞ்சீவ்

சாப்பாட்டு பிரியர் சஞ்சீவ்

வழக்கமாக விஜய்யும் அவரது நெருங்கிய நண்பர்கள் ஐந்து பேரும் தாங்கள் படித்த லயோலா கல்லூரிக்கு அருகில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் தான் சந்தித்துக் கொள்வார்களாம். அதே போல விஜய் வீட்டில் சந்திக்க நேரிட்டால் அவரது அம்மா சோபாவிடம் அனைத்து வகையான அசைவ உணவுகளையும் சமைத்து வைக்கச் சொல்லுவாராம். அதில் சஞ்சய் தான் சாப்பாட்டை வெளுத்து கட்டி விடுவார் என்று அவரது அம்மா சோபா ஒரு முறை கூறியுள்ளார்.

ஏன் ஒன்றாக நடிப்பதில்லை

ஏன் ஒன்றாக நடிப்பதில்லை

இப்படி நெருங்கிய நண்பர்களாக இருந்தும் விஜய் படத்தில் ஏன் பெரிய கதாபாத்திரங்களில் சஞ்சீவ் நடிப்பதில்லை என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நாங்கள் ஆறு நண்பர்களும் ஒரு பாலிசியுடன் தான் இத்தனை ஆண்டுகள் பயணிக்கிறோம். பணி ரீதியாக யாரும் யாரையும் தொந்தரவு செய்ததில்லை. அவரவர் வேலையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி பேசிக் கொள்வோமே தவிர்த்து உன் படத்தில் எனக்கு வாய்ப்பு தா என்று நானும் கேட்க மாட்டேன் யாரேனும் ஒரு இயக்குநர் விஜய்க்கு கதை வைத்திருக்கிறேன் சிபாரிசு செய்யுங்கள் என்று கூறினால் அதனையும் செய்ய மாட்டேன் என்று சஞ்சீவ் கூறியுள்ளார். நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தில் இவர்களுடைய நண்பரும் நடிகரும் இயக்குநருமான ஸ்ரீநாத் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அதே போல சஞ்சீவும் ஆரம்ப காலகட்டத்தில் சில படங்களில் விஜய்யுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X