»   »  சரத்குமாரே தலைவர்!

சரத்குமாரே தலைவர்!

Subscribe to Oneindia Tamil


நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று நடிகர் சங்கத் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க சரத்குமார் முடிவு செய்துள்ளார். அதன்படி அடுத்த 2 ஆண்டுகளும் அவரே தலைவராக இருப்பார்.


நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திடீரென ராஜினாமா செய்தார் சரத்குமார். தனது அரசியல் பணிச் சுமையைக் காரணம் காட்டி அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

ஆனால் சரத்குமாருக்கு எதிராக நடிகர் சங்கத்தில் ஒரு தரப்பினர் ரகசியக் கூட்டம் போட்டதும், சரத்குமாருக்கு எதிராக செயல்படத் தீர்மானித்ததுமே சரத்தின் இந்த முடிவுக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் சரத்தின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க நடிகர் சங்கத்தின் செயற்குழு அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

அப்போது அனைத்து உறுப்பினர்களும் சரத்குமார் தொடர்ந்து தலைவராக பதவி வகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இன்னும் மிச்சமுள்ள 2 ஆண்டு பதவிக்காலத்தையும் சரத்குமார் வகிக்க வேண்டும் என்றும் கோரினர்.

இதையடுத்து தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் சரத்குமார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், செயற்குழுவில், நான் தலைவராக நீடிக்க வேண்டும் என ஒரு மனதாக கோரிக்கை விடுத்தனர். அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். தலைவராக தொடர்ந்து நீடிப்பேன்.

எனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தையும் நான் பூர்த்தி செய்வேன். இந்தக் கால கட்டத்திற்குள் தற்போதுள்ள நடிகர் சங்க வளாகத்தில் புதிய வணிக வளாகத்தை கட்டி முடிக்க முயற்சிப்பேன் என்றார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கூறுகையில், சரத்குமார் திறமையான ஒரு மனிதர். எனவே எந்த காரணத்தைக் கொண்டும் அவரை தலைவர் பதவியிலிருந்து விலக விட மாட்டோம். சங்கம் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. அனைவரும் அவரது முடிவுகளை ஒருமனதாக ஆதரிக்கிறோம் என்றார்.

இதன் மூலம் சரத்குமாரின் ராஜினாமா பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது

Read more about: sarathkumar
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil