»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மூத்த நடிகர்களில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டுவதில் கமலுக்கு அடுத்த இடம் சத்யராஜுக்குத் தரலாம். கொஞ்ச காலம்அரைத்த மாவையே அரைத்ததால் காணாமல் போய், பின்னர் தனது வயதுக்கேற்ற பாத்திரங்களைச் செய்து விட்ட இடத்தில்கொஞ்சத்தை திரும்ப மீட்டிருக்கிறார்.

இப்போது கோலிவுட்டில் பெரும் பிஸியான நடிகர் என்றால் அது சத்யராஜ் தான் என்றாகிவிட்டது. தனது ரேட்டையும் மிகக்கணிசமான அளவுக்குக் குறைத்துவிட்டதால், சத்யராஜ் காட்டில் அடைமழை.

வயது போன காலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு பிஸியாகியிருக்கிறார்.

இப்படி அவர் நடிக்கும் படங்களில் ஒன்று மகா நடிகன். இதில் ஒரு துணை நடிகன் எப்படி படிப்படியாக ஹீரோவாகி, சூப்பர்ஸ்டாராகி, அப்படியே முதல்வர் நாற்காலியையும் பிடிக்கிறான் என்பதே கதை.

கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரின் கதை தான். மணி ரத்னம் எடுத்த இருவர் மாதிரி ரியலிஸ்டிக்காக இல்லாமல், நல்ல அளவில்பேன்டசி, காமெடியைக் கலந்து முழுக்க முழுக்க படு ஜாலியான மசாலா படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் முழு எம்.ஜி.ஆராகவே நடிக்கிறார் சத்யராஜ். ஆனாலும் சீரியஸ்னசுக்கு துளியும் இடமில்லை என்பதற்கு ஒரு உதாரணமாகஇப் படத்தில் ஒரு பாடலைச் சொல்லலாம்.

அல்வா நாயகனே,

அழும்பு தலைவனே,

அடிதடியில் ஆண்டவனே என்று சத்யராஜை மக்கள் எல்லாம் பாராட்டி பாடுவதாக அமைத்துள்ளார்கள்.

படத்தில் சத்யராஜ் நடிகனாகவே நடிப்பதால், ஏகப்பட்ட சூட்டிங் காட்சிகளும் படத்தில் இடம் பெறுகின்றன. கே.எஸ்.ரவிக்குமார்,மணிவண்ணன், விக்ரமன், எஸ்.ஜே.சூர்யா, டி.பி.கஜேந்திரன் என பல டைரக்டர்களின் படங்களிலும் சத்யராஜ் நடிப்பதாக கதை.

இதனால் இந்த டைரக்டர்கள் எல்லோருமே படத்தில் டைரக்டர்களாகவே நடிக்கின்றனர். படத்தில் சத்யராஜின் பெயரைச் சொல்லியாரும் அழைக்க மாட்டார்களாம். இவருக்கு பெயரே பைவ் ஸ்டார் தான்.

படத்தில் நமிதா, மும்தாஜ் ஆகியோரும் நடிகைகளாகவே நடிக்கின்றனர். ஹீரோயின் என்றால், அது நமிதாவை வைத்துக்கொள்ளலாம். ஆனால், மும்தாஜுக்கும் இணையான வேடம் தரப்பட்டுள்ளது. இருவருக்கும் அப்படி என்ன பெரிய வேடம்என்கிறீர்களா?.

பேருக்கு கொஞ்சம் கச்சை கட்டி ஆட்டம் போடுவது தான். அதை மும்தாஜ் நன்றாகவே செய்வார் என்பது நமக்குத் தெரியும்.ஆனால், அவரையே தூக்கி சாப்பிட்டுவிட்டாராம் நமிதா. குறையே வைக்காமல் உடைகளைக் குறைத்து நடித்துள்ளார். (போட்டிஒரு பக்கம் இருந்தாலும், இப் படத்தில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்ததில் இருந்து மும்தாஜும், நமீதாவும் இணைபிரியா தோழிகள்ஆகிவிட்டார்களாம்)

சாதாரண நடிகனாக இருக்கும்போது கூட நடிக்கவே மறுக்கும் முன்னணி நடிகைகளான மும்தாஜும், நமிதாவும் பின்னர் சத்யராஜ்சூப்பர் ஸ்டார் ஆனவுடன், அவரை வளைக்க முயல்வதாக போகிறது கதை.

வீட்டிலிருந்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு சாப்பாடு கொண்டு வந்து இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சத்யராஜுக்குஊட்டிவிடுவது, கொஞ்சிக் குலாவி குஜால் செய்வது என, சில முன்னாள் வழியல் நடிகைகளை நினைவுபடுத்துவது போல பலகாட்சிகளை வைத்திருக்கிறார்கள்.

சுந்தரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குவது ஷக்தி சிதம்பரம். என்னம்மா கண்ணு, சார்லி சாப்ளின் எனகாமெடிப் படங்களால் ஏற்கனவே ஒரு கலக்கு கலக்கியவர் தான் இவர்.

இப் படத்தில் ஆட்டோகிராப் மல்லிகாவும் இருக்கிறார். அவருக்கும் படத்தில் நடிகை வேடம் தானாம்.

ஹிட்லரில் ஆரம்பித்து ஏசு பிரான் கேரக்டர் வரை பல கெட்-அப்களில் வரும் சத்யராஜ், கடைசியாக எம்.ஜி.ஆராகவேநடிக்கிறாராம்.

படம் முழுவதுமே அரசியலுக்கும் பதவிக்கும் ஆளாய் பறக்கும் நடிகர்களுக்கு பஞ்ச் கொடுத்தபடியே கதை நகர்கிறதாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil