»   »  இன்று உலக முத்த தினம்: தமிழ் சினிமாவின் அதிரடி முத்தக் காட்சிகள் இதோ!

இன்று உலக முத்த தினம்: தமிழ் சினிமாவின் அதிரடி முத்தக் காட்சிகள் இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச முத்த தினமான இன்று தமிழ் சினிமாவில் திரும்பி பார்க்க வைத்த முத்தக் காட்சிகளை நினைவுகூர்வோம்.

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 6ம் தேதி சர்வதேச முத்த தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் முத்தக் காட்சி என்றதுமே சட்டென்று நினைவுக்கு வருபவர் உலக நாயகன் கமல் ஹாஸனே.

துணிந்து பல முத்தக் காட்சிகளில் நடித்த நாயகன் அவர்.

புன்னகை மன்னன்

புன்னகை மன்னன்

தமிழ் சினிமாவில் லிப் டூ லிப் முத்தக் காட்சியை அறிமுகப்படுத்திய பெருமை நம் உலக நாயகன் கமல் ஹாஸனையே சேரும். புன்னகை மன்னன் படத்தில் கமல் ரேகாவுக்கு லிப் டூ லிப் கொடுத்தது அப்போது பெரிதாக பேசப்பட்டது.

ஹே ராம்

ஹே ராம்

கமல் ஹாஸன் இயக்கி நடித்த ஹே ராம் படத்தில் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடித்திருந்தார். கமல், ராணி முகர்ஜி லிப் டூ லிப் முத்தக் காட்சி பாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.

விண்ணைத் தாண்டி வருவாயா

விண்ணைத் தாண்டி வருவாயா

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த சூப்பர் ஹிட் படம் விண்ணைத் தாண்டி வருவாயா. அந்த படத்தில் சிம்பு, த்ரிஷா இடையேயான முத்தக் காட்சி பெரிதும் பேசப்பட்டது.

மரியான்

மரியான்

மரியான் படத்தில் தனுஷும், பார்வதி மேனனும் லிப் டூ லிப் முத்தக் காட்சியில் நடித்தனர். லிப் டூ லிப் காட்சி என்றாலே தனுஷுக்கு ரொம்ப பயந்து பயந்து வருமாம்.

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா காதல் பொங்க சமீரா ரெட்டிக்கு முத்தம் கொடுப்பார். பழைய காலத்து படங்கள் போன்று தலையை காட்டி முத்தம் கொடுப்பதை மறைத்தாலும் அந்த காட்சியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

குரு

குரு

குரு படத்தில் மாதவன் வித்யா பாலனுக்கு நச்சுன்னு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார். சாக்லேட் பாயான மேடியின் முத்தக் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்திங் சம்திங்

சம்திங் சம்திங்

சம்திங் சம்திங் படத்தில் காதலை நிரூபிக்க ஜெயம் ரவி மிளகாய்த் தூள் கலந்த சாப்பாடை சாப்பிட்டு விட்டு துடிக்க அதை பார்த்த த்ரிஷா உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பார்.

நான் சிகப்பு மனிதன்

நான் சிகப்பு மனிதன்

நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷால், லட்சுமி மேனன் லிப் டூ லிப் கொடுக்கும் காட்சி இருந்தது. குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு பெயர் போன லட்சுமி மேனன் இந்த காட்சியில் நடித்தது பலரையும் வியக்க வைத்தது.

கடல்

கடல்

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கும், துளசியும் லிப் டூ லிப் காட்சியில் நடித்தனர். முதல் படத்திலேயே இருவரும் துணிந்து நடித்துள்ளனர்.

English summary
We have compiled some sensational kissing scenes in Tamil cinema on international kiss day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil