»   »  ஷாருக், சூர்யா டாப்! - பிந்தும் விஜய்!!

ஷாருக், சூர்யா டாப்! - பிந்தும் விஜய்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்து வெளியாகியுள்ள ஓம் சாந்தி ஓம் மற்றும் சூர்யா, ஆசின் நடிப்பில் வெளியாகியுள்ள வேல் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ளன. விஜய் நடித்துள்ள அழகிய தமிழ் மகன் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாம்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு வேல், அழகிய தமிழ் மகன், பொல்லாதவன், மச்சக்காரன் உள்ளிட்ட தமிழ்ப் படங்களும், ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓமும் திரைக்கு வந்துள்ளன.

தீபாவளித் திரைப்படங்கள் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாம். சென்னையில் இந்தப் படம் நான்கு தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. நான்கு தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஷாருக் படம் ஓடுகிறதாம். மதுரை, திருச்சி, வேலூரிலும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

ஷாருக்கானின் முந்தைய படமான சக்டே இந்தியாவுக்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவாஜி ஓடிக் கொண்டிருந்த நிலையில், சக்டே இந்தியா, சென்னையில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தது. தற்போது ஓம் சாந்தி ஓமும் பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

அதேபோல சூர்யா, ஆசின் நடிக்க, ஹரி இயக்க வெளியாகியுள்ள வேல் படத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். இந்த இடங்களில் விஜய் படத்தை விட வேல் படம் சிறப்பாக ஓடிக் கொண்டுள்ளதாம்.

பி மற்றும் சி சென்டர்களில் வேலுக்கு அருகில் எந்தப் படமும் வர முடியாத அளவுக்கு படு ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறதாம். சென்னை போன்ற நகரங்களில் மட்டும் வேலுக்கு பக்கத்தில் அழகிய தமிழ் மகன் இருக்கிறது.

ஆனால் ஒட்டுமொத்த தமிழக விநியோகஸ்தர்களின் கூற்று, வேல்தான் நீண்ட நாள் ஓடி பெரும் வசூலை அள்ளும் என்பதாக உள்ளதாம்.

விஜய்யின் அழகிய தமிழ் மகன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்தது. தீபாவளியன்றும், அதற்கு அடுத்த நாளும் தான் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் படம் குறித்து நெகட்டிவான பேச்சுக்கள் வர ஆரம்பித்து விட்டதால் கூட்டம் குறைந்து போய் விட்டதாம்.

அட்வான்ஸ் புக்கிங் சுத்தமாக குறைந்து போய் விட்டதாம். திங்கள்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி சென்னையில் அழகிய தமிழ் மகன் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான தியேட்டர்களில் கூட்டம் இல்லையாம்.

விஜய்யின் படம் இந்தத் தீபாவளி ரிலீஸில் 3வது இடத்தில் இப்போதைக்கு உள்ளது. இருப்பினும் இந்த இடம் கூட உறுதியானதில்லை என்று கூறப்படுகிறது. காரணம், தனுஷின் பொல்லாதவன் கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆக ஆரம்பித்துள்ளதாம். நகர்ப்புறங்களில் படத்திற்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளதால் இது விஜய் படத்தை முந்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

சென்னை, கோவையில் பொல்லாதவனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் வாரங்களில் பொல்லாதவன் வசூலில் சாதனை படைக்கக் கூடும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுவதால் அழகிய தமிழ் மகன் 4வது இடத்திற்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கண்ணாமூச்சி ஏனடா படத்திற்கு ஊரகப் பகுதிகளில் சுத்தமாக வரவேற்பு இல்லையாம். அதேபோல மச்சக்காரன், ஆக்ரா ஆகிய படங்களுக்கும் சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது. ஜீவனுக்கு மச்சக்காரன் கை கொடுக்காது என்று கூறுகிறார்கள்.

மொத்தத்தில் ஷாருக்கானும், சூர்யாவும்தான் இந்த தீபாவளியை அட்டகாசமான தீபாவளியாக மாற்றிக் கொண்டுள்ளனர் என்பது திரையுலகினரின் கணிப்பு.

Read more about: sharuk surya vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil