»   »  ஒரே நாளில் பரட்டை,சிவாஜி?

ஒரே நாளில் பரட்டை,சிவாஜி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜியும், அவரது மருமகன் தனுஷ் நடித்துள்ள பரட்டை என்கிற அழகுசுந்தரம் படமும் ஒரே நாளில் திரைக்கும் வரும்எனத் தெரிகிறது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படம்"சிவாஜி. கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த மாதம் இறுதி வரைதான் ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதனால் அவர் சம்பந்தப்பட் காட்சிகளை போர்க்கால வேகத்தில் ஷங்கர்முடித்து வருகிறார்.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்த நிலையில் பின்னணி இசை சேர்ப்பு வேலையில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தீவிரமாகஈடுபட்டுள்ளார். சிவாஜி, தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல, ரஜினியின் மருமகன் தனுஷ் நடித்து வரும் படம் "பரட்டை என்கிற அழகுசுந்தரம். சுரேஷ்கிருஷ்ணா இப்படத்தை இயக்கி வருகிறார்.கன்னடத்தில் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் நடித்து வெற்றி பெற்ற "ஜோகி திரைப்படத்தை தழுவி பரட்டையை உருவாக்கியுள்ளார் சுரேஷ்கிருஷ்ணா.

ஊர்வசி அர்ச்சனா இப்படத்தில் நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். இத்திரைப்படமும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ரிலீஸ் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil