»   »  கல்யாணத்துக்கு ரெடியாகும் ஷ்ரேயா ரெட்டி!

கல்யாணத்துக்கு ரெடியாகும் ஷ்ரேயா ரெட்டி!

Subscribe to Oneindia Tamil

திமிரு ஷ்ரேயா ரெட்டிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம். வெயில் காலம் முடிவதற்குள் அவருக்கு மாப்பிள்ளையைப் பார்த்து முடித்து விட முஸ்தீபாக வேட்டை நடந்து வருகிறதாம்.

கருப்பு ராஜா விஷாலின் ஆண்மையால் ஈர்க்கப்பட்டு அட்டகாசமாக சவால் விட்டு, வம்புக்கு இழுக்கும், சிவப்பு ரோஜாவாக தெனாவாட்டு நடிப்பால் திமிர்வாத கேரக்டரில் கலக்கியவர் ஷ்ரேயா ரெட்டி.

எஸ்.எஸ். மியூசிக்கில் காம்பியராக வந்து பீட்சா பார்ட்டிகளை கலக்கி வந்த ஷ்ரேயா தனது மதுரைக்கார நடிப்பால் பட்டி தொட்டியெங்கும் இளைஞர்களை மிரட்டினார்.

திமிரு ஹிட் ஆகவே, டிவி பொட்டிக்குள் முடங்கிக் கிடந்த ஷ்ரேயா ரெட்டி வெள்ளித் திரையில் பிரபல நடிகையானார். அடுத்து வெயில் படத்தில் கிழிந்த புடவையும், கசங்கிய முகமுமாக வந்து நடிப்பில் வெரைட்டி காட்டியபோது வெவரமான ரெட்டிதான் ஷ்ரேயா என எல்லோரும் பாராட்டினார்கள்.

கிளாமர், அடுத்து பாந்தம் என இருவிதமான நடிப்பைக் காட்டியும் கூட ஷ்ரேயாவுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து குவியவில்லை. தமிழ் இப்படி தட்டாமாலை சுற்றி டொப்பென்று கீழே போட்டு விட்டதால் சுணங்கிப் போனார் ஷ்ரேயா.

கையில், படங்கள் எதுவும் இல்லாததால் ஷ்ரேயாவுக்கு சிக்கிரமே கால் கட்டு போட்டு விட அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனராம். தங்களுக்குத் தெரிந்தவர்கள், புரிந்தவர்களுக்கு நல்ல மாப்பிள்ளையா இருந்தா சொல்லுங்கோ என்று கேட்டு வருகிறார்களாம்.

புரோக்கர்களிடமும் பிள்ளையின் ஜாதகத்தை ஜெராக்ஸ் கொடுத்து நாலாபக்கமும் துரத்தி விட்டுள்ளனராம்.

ஆனால் ரெட்டியோ, இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று கூறி வருகிறாராம். இன்னும் நான் போட வேண்டிய ரொட்டி நிறைய உள்ளது. சாதித்த பின்னர்தான் வெட்டிங் என்கிறாராம்.

நடித்த முதல் இரண்டு படங்களும் நன்றாக ஓடியும் தனக்கு வாய்ப்பு வராது சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும் தமிழில் நல்ல கதாபத்திரத்தில் நடித்து அசத்த வேண்டும். நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆனால் இப்படித்தான் இவர் பேசுவார், நம்ம கடமையை நாம பார்ப்போம் என்று ஷ்ரேயாவின் அப்பாவும், அம்மாவும் கமுக்கமாக மாப்பிள்ளைக்கு வலை விரித்து வைத்து காத்திருக்கிறார்களாம்.

எந்த ரெட்டியார் மாட்டப் போகிறாரோ!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos