»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய தூதர்களின் சிறப்புக் கூட்டத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா ராய், நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார் ஆகியோர் கலந்துகொள்ளும் நடன நிகழ்ச்சி நடக்கிறது.

இதை பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்தியத் தூதர்கள், அதிகாரிகள் பார்த்து ரசிக்கவுள்ளனர்.

நாளை (10ம் தேதி) நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 3 பாடல்களுக்கு சிம்ரன் நடனமாட உள்ளார். அதற்கான ஒத்திகைநிகழ்ச்சியில் தற்போது அவர் தீவிரமாக ஈடுபட்டார்.

சென்னை தாஜ் ஹோட்டலில் நடந்த நடன ஒத்திகைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

ராஜூ சுந்தரம் எனக்கு கல்யாண பத்திரிக்கை அனுப்ப மாட்டார். அப்படியே அனுப்பினாலும் நான் போகமாட்டேன்.

இப்போதெல்லாம் என்னைப் பற்றி வரும் செய்திகள் கிட்டத்தட்ட சரியாகவே உள்ளன. முன்புதான் நிருபர்கள்கண்டபடி எழுதினார்கள் என்றார் சிம்ரன்.

நெப்போலியன் ஆட்டம்!

சன் டிவிக்காக பொங்கல் பண்டிகையையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள பாடலுக்கு நடிகர்நெப்போலியன் உள்ளிட்ட 30 பேர் நடனமாடியுள்ளனர். இந்த "பாடலும் ஆடலும்" நிகழ்ச்சி பொங்கல் தினத்தன்றுஒளிபரப்பாகிறது.

பொங்கல் தினத்தையொட்டி சன் டிவிக்காக இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் கருணாநிதி.

"பொங்கலோ பொங்கல்..." என்று தொடங்கும் பாடலுக்கு நெப்போலியன், நடிகை சுவாதிகா உள்ளிட்ட 30 பேர்நடனமாடியுள்ளனர்.

பொங்கல் பண்டிகையின் சிறப்பு, தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை சித்தரிக்கும் வகையில் இந்தப் பாட்டுஅமைந்துள்ளதாம்.

இன்னொரு பாடலான "எழுவாய் தமிழா..." என்ற பாடலுக்கு நடிகர் நிழல்கள் ரவி, கவிதா ஆகியோர்நடனமாடியுள்ளனர்.

இதிலும் 30க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். உழவர் திருநாளை சிறப்பிக்கும் வகையில்இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாடல்களுக்கும் நடன வடிவமைப்பு சிவசங்கர். ஈ. ராமதாஸ் இயக்கியுள்ளார். வரும் 15ம் தேதி காலைகாலை 7.30 மணிக்கு "வணக்கம் தமிழகம்" நிகழ்ச்சியில் இந்தப் பாடல்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil