»   »  'மெல்லிடை அழகி' சிம்ரன் பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDSimran

'மெல்லிடை அழகி' சிம்ரன் பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDSimran

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 80, 90-களில் பிறந்தவர்களின் கனவு தேவதை சிம்ரன். கனவு தேவதையாக வலம் வந்த சிம்ரன் இப்போது அம்மா, அண்ணி வேடங்களுக்கு நகர்ந்துவிட்டாலும் ரசிகர்களின் நினைவுக் கோட்டையில் தேவதையாக வாழ்கிறார்.

'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் ருக்குவாக, 'உன்னைக்கொடு என்னைத் தருவேன்' இந்துவாக, 'கண்ணெதிரே தோன்றினாள்' ப்ரியாவாக ரசிகர்களுக்கு அறிமுகமான சிம்ரன், திரை தாண்டி நினைவில் நிற்கிறார்.

கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கண்களாலும், உடல் மொழியாலும், உணர்வுகளாலும் நடித்து ரசிகர்களை ஈர்த்த சிம்ரனுக்கு இன்று பிறந்தநாள்.

சிம்ரன்

சிம்ரன்

பாலிவுட், மல்லுவுட் திரைப்படங்களில் நடித்திருந்த சிம்ரன் 'ஒன்ஸ்மோர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் வருடத்திலேயே 'நேருக்கு நேர்', 'வி.ஐ.பி' ஆகிய படங்களிலும் நடித்து தென்னிந்தியாவில் சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றார். அஜித், விஜய் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

முன்னணி நடிகையாகப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, 'பார்த்தேன் ரசித்தேன்' படத்தில் நெகட்டிவ் ரோலிலும் நடித்தார். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறுமியின் வளர்ப்புத் தாயாக உணர்வுகளைக் காட்டினார். இந்தப் படத்திற்காகவும் சிம்ரனுக்கு ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது. கமல்ஹாசனோடு நடித்த 'பம்மல் கே சம்மந்தம்', 'பஞ்ச தந்திரம்' இரண்டு படங்களிலும் காமெடி காட்சிகளிலும் கலக்கியிருப்பார் சிம்ரன்.

மெல்லிடை அழகி

மெல்லிடை அழகி

சிம்ரன் என்றவுடன் நினைவுக்கு வருவது அவரது மெல்லிடை. இன்றைக்கும் இடுப்பை ஆட்டி நடக்கும் பெண்களை 'மனசுல சிம்ரன்னு நெனைப்பு' என கிண்டல் செய்வதை கேட்கலாம். இடை சிறுத்த நடிகைகள் தமிழுக்கு அறிமுகமாகும்போதெல்லாம் அடுத்த சிம்ரனாகத்தான் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். ரசிகர்களும் அவர்களுக்குள் சிம்ரனைத் தேடிப் பார்த்துப் பிறகு சோர்ந்து போகிறார்கள்.

காதலிகளுக்கு சிம்ரன் சாயல்

காதலிகளுக்கு சிம்ரன் சாயல்

ஆனால், மெல்லிடை தாண்டி சிம்ரனை பெரும்பாலானோர் விரும்புவதற்குக் காரணம், அவரது நடிப்பு. சிம்ரனின் கண்கள் உணர்வுகளைச் சொல்லக்கூடியவை. நேருக்கு நேர் பார்த்து காதலனிடம் பேச முடியாதபோது, துளிர்க்கும் கண்ணீருடன் வெட்கம் காட்டும் பெண்களுக்கு சிம்ரனின் சாயல் இருக்கலாம். 80-களின் இளைஞர்கள் அவரது நடிப்பில் தங்கள் காதலியை நினைவுபடுத்திக் கொண்டார்கள்.

தனி ஒருத்தி

தனி ஒருத்தி

சிம்ரன் சிறந்த பரதநாட்டியக் கலைஞரும் கூட. தமிழ் சினிமாவில் சிறப்பாக ஆடத்தெரிந்த சில நடிகைகளில் சிம்ரனும் ஒருவர். மில்லினியம் ஆண்டின் தொடக்கத்திலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகை சிம்ரன் தான். இப்போது நயன்தாராவும், அனுஷ்காவும் பிடித்திருக்கும் இடத்தை சிம்ரன் தனி ஒருத்தியாக தன் கையில் வைத்திருந்தார். காலம் தேவதைகளுக்கு மட்டும் தனி விதி செய்திடுமா என்ன? சிம்ரன் திருமணம் செய்து கொண்டார்.

கனவு தேவதை

கனவு தேவதை

திருமணத்திற்குப் பிறகு, பரத் நடித்த 'சேவல்', கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவுடன் 'வாரணம் ஆயிரம்' ஆகிய படங்களின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். குணச்சித்திர நடிகையாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'சீமராஜா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வெர்சட்டைல் நடிப்பில் வெளுத்து வாங்கும் சிம்ரன் என்றென்றைக்கும் கனவு தேவதைதான். பிறந்தநாள் வாழ்த்துகள் சிம்ரன்!

English summary
Actress Simran's 42th birthday is today. Here is a tribute to Versatile actress Simran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X