»   »  5 நாயகிகளின் நான் அவனில்லை!

5 நாயகிகளின் நான் அவனில்லை!

Subscribe to Oneindia Tamil

பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினிகணேசன் பிளேபாய் வேடத்தில் நடித்து அந்தக்காலத்தில் வெளியான நான் அவனில்லை, ஜீவன் நடிப்பில் மீண்டும் ரீமேக் ஆகிறது.

காக்க காக்க படத்தில் கொடூர வில்லனாக வந்த ஜீவன், அடுத்து திருட்டுப் பயலேபடத்தில் அசத்தல் ஹீரோவாக கலக்கினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவன் தனதுசம்பளத்தை ஏற்றி விட்டார். இதனால் அவரைத் தேடி படங்கள் எதுவும் வரவில்லை.

இந்த நிலையில் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடிக்க ஜீவன் முன்வந்ததால்ஒரு அருமையான படம் அவரைத் தேடி வந்துள்ளது. நான் அவனில்லை படத்தின்ரீமேக்கில் ஜீவன் இப்போது நடிக்கவுள்ளார்.

பலவிதமான தோற்றங்களில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும்மோசடி ஆசாமியாக ஜெமினிகணேசன் நடித்த படம்தான் நான் அவனில்லை. இந்தப்படம் சரியாக ஓடாவிட்டாலும் கூட ஜெமினியின் நடிப்பு பலமாக பேசப்பட்டது.

இந்தப் படத்தை இப்போது அதே தலைப்பில் ரீமேக் ஆகிறது. செல்வா படத்தைஇயக்கவுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர்வசனம் எழுதுகிறார்.

இப்படத்தில் ஜீவனுக்கு ஜோடியாக 5 முன்னணி நடிகைகள் நடிக்கவுள்ளனர். சினேகா,நமீதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லாதான் அந்த ஐம்பெரும் பாவைகள்.

இதில் நமீதா, மாளவிகாவுக்கு கிளாமர் வேடங்களாம். கீர்த்தி சாவ்லாவுக்கும் கிளாமர்சைடில் நிறைய வேலை கொடுக்கப் போகிறார்களாம். சினேகா குத்து விளக்காக வரப்போகிறார். ஜோதிர்மயியை நடுத்தரமாக பயன்படுத்தவுள்ளனர்.

கவர்ச்சிப் பாட்டுக்களை எடுப்பதற்காகவே இயற்கையால் படைக்கப்பட்டதோ எனகூறும் அளவுக்கு சாலக்குடி ரொம்பவும் பேமஸாகி விட்டது. அந்த இடத்தில்நமீதாவை வைத்து ஒரு அட்டகாசமான குத்துப் பாட்டை கொத்தவுள்ளனர்.

மாளவிகா ஏற்கனவே திருட்டுப் பயலே படத்தில் ஜீவனுடன் இணைந்து நடித்துள்ளார்.இந்தப் படத்திலும் அவருக்கு கிளாமர் பிளஸ் நடிப்பைக் காட்டக் கூடிய வகையில்கேரக்டரை செதுக்கியுள்ளனராம்.

லொள்ளு சபா சந்தானத்திற்கு முக்கிய கேரக்டர் கொடுத்துள்ளனராம். இந்த வேடம்அவருக்கு திரையுலகில் நிரந்தர இடத்தைக் கொடுப்பதாக அமையுமாம்.

ஐம்பெரும் நாயகிகளுடன் ஜீவன் இணைந்து நடிக்கும் நான் அவனில்லை,திரையுலகைக் கலக்கும் என்கிறார் செல்வா.

நமீதா,மாளவிகாவை வைத்துக் கொண்டு கலக்கல் படத்தைக் கொடுக்க முடியாதாஎன்ன?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil