»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

"சூரி" படத்தில் பார்த்திபனுடன் கவர்ச்சி மழையில் நனைந்துள்ளாராம் விஜயலட்சுமி.

கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்தவர் இவர். காவிரி விஷயத்தில் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கப் போய்கன்னட திரையுலகினரால் புறக்கணிக்கப்பட்டார் இந்தத் தமிழ் நடிகை.

விக்னேஷ் ஹீரோவாக நடித்து வரும் "சூரி" படிப்பிடிப்பு பல மாதங்களாக "பெண்டிங்கில்" இருந்துவருகிறது. படத்தில் சுதி சேர்க்க நினைத்த தயாரிப்பாளர், பார்த்திபனை கெளரவ வேடத்தில் "புக்"செய்தார்.

"மெளன ராகம்" கார்த்திக் போலவே, சிறிது நேரமே வந்தாலும் சிலம்பித் தள்ளியிருக்கிறார்பார்த்திபன். பார்த்திபனைப் போலவே விஜயலட்சுமியும் இந்தப் படத்தில் கெளரவ வேடத்தில்கலக்கியுள்ளார்.

பார்த்திபனுடன் பாரபட்சமின்றி கவர்ச்சி காட்டியுள்ளாராம் விஜயலட்சுமி.

ஊட்டியில் "ஷூட்டிங்" தடை

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் "மலைகளின் ராணி" எனப்படும்ஊட்டியில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய மலை வாசஸ்தலங்களில் ஒன்றான ஊட்டியில் சீசன் நன்றாக உள்ளதால் சுற்றுலாபயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதையடுத்து மலர்ப் பூங்காக்கள், ஏரி, மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும்பொருட்டு அங்கு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை இந்த தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி சீசன் முடியும்வரை அங்கு எந்தவிதமான படப்பிடிப்பும் நடத்த முடியாது என்று தோட்டக் கலைத் துறைஅறிவித்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil