»   »  ஸ்ரீகாந்த் வீட்டில் வலுக்கட்டாயமாய் குடியேறியவந்தனா: போலீசில் இரு தரப்பும் புகார்

ஸ்ரீகாந்த் வீட்டில் வலுக்கட்டாயமாய் குடியேறியவந்தனா: போலீசில் இரு தரப்பும் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:நிதி மோசடி சிக்கலில் மாட்டியுள்ள காதலி வந்தனாவின் குடும்பத்திடம் இருந்து ஸ்ரீகாந்த் விலக ஆரம்பித்துள்ள நிலையில், அவரது வீட்டில் குடியேற பெட்டி படுக்கையுடன் வந்திறங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் வந்தனா.

தனக்கு கோவிலில் வைத்து ஸ்ரீகாந்த் தாலி கட்டிவிட்டதாகவும், தானும் அவரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் வந்தனா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த மாடலான வந்தனாவை நடிகர் ஸ்ரீகாந்த் காதலித்து வந்தார். இரு குடும்பத்தாரின் சம்பந்தத்துடன் திருமணம் நடக்க இருந்தது.

இந் நிலையில் வந்தனா குடும்பத்தினர் வங்கிகளில் பல கோடி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன.

இதையடுத்து திருமணம் நின்று போனது. ஸ்ரீகாந்தும் வந்தனாவை விட்டு விலக ஆரம்பித்தார்.

ஆனால், காதலர்களாக இருந்தபோது ஸ்ரீகாந்தும் வந்தனாவும் உல்லாசமாக ஊர் சுற்றியுள்ளனர். அப்போது எடுத்த படங்களை எல்லாம் வந்தனா பத்திரமாக வைத்துள்ளார்.

ஆனால், இப்போது வந்தனாவுடன் பேசுவதையே ஸ்ரீகாந்த் நிறுத்திவிட்டார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் (13ம் தேதி) காலையில் பெட்டி படுக்கையுடன் ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு வந்திறங்கியுள்ளார் வந்தனா.

இதை எதிர்பாராத ஸ்ரீகாந்தின் பெற்றோர் வந்தனாவுடன் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளனர். அவரை வீட்டை விட்டு வெளியே போகுமாறு விரட்டியுள்ளனர்.

ஆனால், தானும் ஸ்ரீகாந்தும் உல்லசமாய் காதலர்களாய் சுற்றியபோது எடுத்த படங்களைக் காட்டிய வந்தனா பதிலுக்கு சண்டை போட்டார்.

எனக்கும் ஸ்ரீகாந்துக்கும் கோவிலில் வைத்து கல்யாணம் ஆகிவிட்டது. ஊர் அறிய மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் என்று தான் இதுவரை காத்திருந்தேன். என்னையும் ஸ்ரீகாந்தையும் பிரிக்க முடியாது. நான் அவருடன் தான் வாழ்வேன் என்று வாக்குவாதம் செய்தார்.

இரு தரப்புக்கும் இடைேய சண்டை வலுக்கவே அதுவரை தன் அறையில் இருந்த ஸ்ரீகாந்த் வெளியில் வந்து வந்தனாவை சமாதானம் செய்து வெளியே போகுமாறு கூறியுள்ளார்.

ஆனால் வந்தனா போக மறுத்துவிட்டார். இதையடுத்து ஸ்ரீகாந்தின் ெபற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் ஸ்ரீகாந்த் வீட்டுக்குச் சென்று வந்தனாவிடம் பேசினர். அப்போது அவர் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி படங்களைக் காட்டினார்.

இந் நிலையில் ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு வெளியே போய்விட்டதாகத் தெரிகிறது. அவர் ஹைதராபாத்தில் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே வந்தனாவிலன் தாயார் ஷாலினி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகளையும் ஸ்ரீகாந்தையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், இவ்வாறு சேர ஸ்ரீகாந்தின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்பதாகவும் புகார் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் ஷாலின் கூறுகையில்,

ஸ்ரீகாந்தும் வந்தனாவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தனர். ஸ்ரீகாந்த் பலமுறை எங்கள் வீட்டுக்கு வந்து தங்கினார். அப்போது வந்தனாவுடன் கணவன் போலத்தான் நடந்து ெகாண்டார்.

எங்களைப் பொறுத்தவரை ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் நடந்துவிட்டது. அவர்களைப் பிரிக்க முயற்சி நடக்கிறது என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil