»   »  ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம்;திரிஷாவிடம் விசாரணை?

ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம்;திரிஷாவிடம் விசாரணை?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் தொடர்பாக இருவருக்கும் நெருங்கிய தோழிகளான நடிகை திரிஷாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் தொடர்பாக இருவருக்கும் நெருங்கிய தோழிகளான நடிகை திரிஷாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாந்த் கட்டிய தாலியுடன், அவரது வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து கொண்டுள்ள வந்தனா, கடந்த 5 நாட்களாக வீட்டுக்குள் இருந்தபடியே போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

ஸ்ரீகாந்த்தான் எனது கணவர், அவர் என்னுடன் வந்து குடித்தனம் நடத்தும் வரை போராட்டத்தை விடப் போவதில்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஸ்ரீகாந்த் வீட்டை விட்டுப் போகப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் வந்தனா.

ஆனால், வந்தனாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன், சட்டப்பூர்வமாக அவரிடமிருந்து பிரிய நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகை திரிஷாவிடம் ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம் குறித்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். திரிஷாதான் தன்னை ஸ்ரீகாந்த்துக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்று வந்தனா போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து திரிஷாவிடம் விசாரணை நடத்தினால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் குறித்து ஏதேனும் முக்கியத் தகவல் கிடைக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். திரிஷாவிடம் எப்போது விசாரணை நடத்தப்படும் என்று தெரியவில்லை. ஆனாலும் ஓரிரு நாட்களில் இந்த விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

ஸ்ரீகாந்த் மீது பதில் வழக்கு-வந்தனா

இதற்கிடையே, விவாகரத்து கோரி நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அதை எதிர்த்து வந்தனா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என்று வந்தனாவின் வழக்கறிஞர் ஜெயராணி கூறியுள்ளார்.

வந்தனாவுடன் தனக்கு திருமணம் ஆகி விட்டதை ஸ்ரீகாந்த் ஒத்துக் கொண்டுள்ளார். மேலும், வந்தனாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன், அவரிடமிருந்து பிரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீகாந்த் வழக்கு தொடர்ந்தால் பதில் வழக்கு போடுவோம் என்று வந்தனா தரப்பு கூறியுள்ளது. இதுகுறித்து வந்தனாவின் வழக்கறிஞர் ஜெயராணி கூறுகையில், ஸ்ரீகாந்த் மீது வந்தனா மிகுந்த பிரியத்துடனும், பாசத்துடனும் இருக்கிறார். சேர்ந்து வாழ விரும்புகிறார்.

பல முறை ஸ்ரீகாந்த்தை சந்தித்து சமரசத்திற்கு முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. பிரிவதில்தான் அவர் மும்முரமாக இருக்கிறார். இதனால்தான் வேறு வழியில்லாமல், அவரது வீட்டிற்கு வந்தனா வர நேரிட்டது.

ஸ்ரீகாந்த் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தால், நாங்களும் பதில் மனு தாக்கல் செய்வோம் என்றார் ஜெயராணி.

இதற்கிடையே, கல்யாணமாகி குறைந்தது 6 மாதங்கள் ஆனால்தான் விவகாரத்து கோர முடியும் என்று சட்ட விதி கூறுகிறதாம். எனவே ஸ்ரீகாந்த்துக்கு விவாகரத்து கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.

வந்தனாவிற்கு துரோகம் செய்யவில்லை-கீதா

ஸ்ரீகாந்த்தின் உறவுக்கார பெண் கீதா. ஸ்ரீகாந்த் அவரை அக்கா என்றுதான் அழைப்பார். இவர் பேச்சை கேட்டுதான் ஸ்ரீகாந்த் வீட்டில் திருமணத்தை நிறுத்திவிட்டனர் என வந்தனா கூறியுள்ளார். மேலும் ரூ.10 லட்சம் கொடுத்தால்தான் திருமணம் என கீதா கூறியதாக இன்னொரு குற்றசாட்டையும் கூறியுள்ளார் வந்தனா.

இக்குற்றசாட்டு குறித்து கீதாவிடம் விசாரிக்க போலீஸார் அவரை வடபழனி காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியிருந்தனர். காவல் நிலையத்தில் ஆஜரான கீதாவிடம் உதவி கமிஷ்னர் சேது, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயலாபாய் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது கீதா கொடுத்த வாக்குமூலத்தில்,

என் சொந்த ஊர் ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி. கணவர் என்ஜினியராக உள்ளார். காகிநாடாவில் ஆர்டிஓவாக இருந்தேன். அலுவலகத்தில் ரூ.43 லட்சம் கையாடல் செய்ததாக போலீஸார் வழக்கு போட்டனர். பின்னர் அந்த வழக்கிலிருந்து விடுதலையானேன். தற்போது சென்னை எம்ஜிஆர் நகரில் இருக்கிறேன்.

ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கு நான் சொந்தம் இல்லை. காகிநாடாவிலுள்ள குருஜி மூலம் அறிமுகமானார். ஸ்ரீகாந்த்தும் வந்தனாவும் 2 வருடமாக காதலித்து வந்தனர். வந்தனா இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதனால் எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என என்னிடம் கெஞ்சினார். அதனால் நான் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன்.

வந்தனாவின் ஜாதகத்தை குருஜியிடம் காட்டியபோது, இதில் தோஷம் இருக்கிறது. தோஷம் கழித்தால்தான் திருமணம் செய்ய முடியும் என்றார். அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என்றும் கூறினார். அதற்கு பணம் நான்தான் கொடுத்தேன். வந்தனாவின் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இன்னும் அந்த பணத்தை ஸ்ரீகாந்த் எனக்கு கொடுக்கவில்லை.

ஸ்ரீகாந்த் வந்தனாவை மனைவியாகவே நினைத்து வந்தார். அதை அனைவரும் அறியும்படி திருமணம் செய்ய வேண்டும் எனவும் ஆசைப்பட்டார். அவர் ஆசை நிறைவேறாமல் போனதற்கு நான் காரணம் கிடையாது. சிபிஐ வழக்கு வந்தனாவின் பெற்றோர் மீது இருந்ததால் ஸ்ரீகாந்த் பெற்றோர் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

அவர்கள் சேர்ந்து வாழவேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அவர்களுடைய பதிவு திருமணத்தை நான் தான் செய்து வைத்தேன். இதனால் ஸ்ரீகாந்த் பெற்றோர் என்னுடன் பேசுவது கிடையாது. இப்போது ஸ்ரீகாந்தும் என்னுடன் பேசுவதில்லை. இருவரையும் சேர்த்து வைக்க நான் தயாராக உள்ளேன். நான் வந்தனாவிற்கு எந்தவிதமான துரோகமும் செய்யவில்லை என்று கூறினார்.

அவர் ஸ்ரீகாந்த்திற்கு கொடுத்த ரூ.5 லட்சத்திற்கான ஆவணங்களையும் போலீஸாரிடம் காட்டினார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil