»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ரஜினியின் சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகும் இந்தப் படம் தமிழ்நாடு முழுவதும் 200 தியேட்டர்களில் ரிலீசாகும் என்று தெரிகிறது.

பாபா படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி படத்தின் சூட்டிங் கடந்த அக்டோபரில் தொடங்கியது. வாசுவின் இயக்கத்தில் சென்னை, ஐதராபாத், பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

படத்தின் வசனப் பகுதிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது ஒரு பாட்டும் சில சீன்களும் மட்டுமே பாக்கியாம்.

படத்தில் மொத்தம் 6 பாடல்களில் 5 பாடல்கள் படமாக்கப்பட்டு விட்டன. அதில் ஒரு பாட்டு ரஜினிக்கு ரொம்பவும் பிடித்துவிட்டதாம்.

""தேவுடா தேவுடா நம்மளையும் கொஞ்சம் பாருடா என்று தொடங்கும் அந்தப் பாடலில் "" சாக்கடையை சுத்தம் பண்றவன் நாலு நாள் லீவு போட்டா நாறிப்போய்டும். அவனையும் கொஞ்சம் கவனிடா தேவுடா என்று தொழிலாளர் பிரண்ட்லி பாட்டாகப் போகிறதாம்.

இப்போதெல்லாம் இந்தப்பாடலைத் தான் அடிக்கடி முணு முணுக்கிறாராம் ரஜினி.

ரஜினிக்கு பிடித்த இன்னொரு பாட்டு ""கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம். இந்தப்பாடலை பிரபல இந்திப் பாடகி ஆஷா போஸ்லே மும்பையிலிருந்து வந்து இரண்டு நாள் தங்கியிருந்து பாடிக்கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.

படத்தில் நயனதாராவின் அழகும் நடிப்பும் ரொம்பவே பேசப்படும் என்கிறார்கள். இந்த மலையாளத்து மங்கை சேலையிலேயே எப்போதும் மைல்டான கவர்ச்சி காட்டுவதில் கெட்டிக்காரராக இருக்கிறார் என்கிறார்கள் சூட்டிங் யூனிட்காரர்கள்.

வடிவேலுவின் நகைச்சுவைக்கும் படத்தில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நேற்று ரஜினிக்காக சந்திரமுகி போட்டுக் காட்டப்பட்டது. அவருடன் பிரபு உட்பட சில முக்கிய பிரமுகர்களும் படத்தைப் பார்த்தனர். படம் நன்றாக வந்திருப்பதாக மிகவும் மகிழந்தாராம் ரஜினி.

ரஜினி, நயன்தாராவின் டூயட் பாடல் துருக்கியில் சூட் செய்யப்படவுள்ளது. இதற்காக யூனிட் இன்று இஸ்தான்புல் கிளம்பிச் சென்றுள்ளது.

ஏப்ரல் 14-ந்தேதி படத்தை வெளியிட முழு வீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 200 தியேட்டர்களில் சந்திரமுகி ரிலீசாகுமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil