For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழில் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டன.. லிஸ்ட் இதோ...

  |

  சென்னை : திரைப்படங்களைப் பொறுத்தவரை எந்த படம் வெளிவரும் எந்த படம் வெளிவராது என சில நேரங்களில் நம்மால் கணிக்கவே முடியாது.

  Shocking Shruti Hassan! கமல் ஹாசன் மகள் இல்லையா? | புதிய குழப்பம் | Kamal Hassan, Sariga

  சிலசமயங்களில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்களின் பல படங்கள் கடைசி சமயத்தில் கைவிடப்பட்ட கதைகளும் இங்குண்டு.

  அவ்வாறு தமிழ் திரைப்படத்துறையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கடைசி நேரத்தில் கைவிடப்பட்ட படங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  கங்கை அமரனை கௌரவிக்கும் ஒரு இசை நிகழ்ச்சி ...பல தமிழ் சங்கங்களின் கூட்டு முயற்சி !

  மருதநாயகம்

  மருதநாயகம்

  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்டு வந்த மருதநாயகம் என்ற படம் நிதிப் பிரச்சினை காரணமாக அதன் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இன்று வரை அதன் படப்பிடிப்புகள் தொடங்க முடியாமல் உள்ளது. அப்போது வெளிவந்த இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சினிமாவில் புதுப்புது யுக்திகளை அவ்வப்போது புகுத்தி வரும் கமல்ஹாசன் இந்த படத்தை எழுத்தாளர் சுஜாதா உடன் இணைந்து எழுதியும், இயக்கியும், தயாரித்தும் வந்துள்ளார். இப்படி அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் தயாராகி வந்த மருதநாயகம் படத்தின் ட்ரெய்லரை இன்றும் யூட்யூப் தளத்தில் காணலாம். இந்தப்படம் வெளியாகி இருந்தால் கண்டிப்பாக இந்திய திரைப்படத்துறையில் மிகப்பெரிய ஒரு மைல்கல்லாக இருந்திருக்கும்.

  கரிகாலன்

  கரிகாலன்

  தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வரும் நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாகயிருந்த வரலாற்று படம் கரிகாலன். இந்தப் படம் இயக்குனர் எல்.ஐ கண்ணன் இயக்கத்தில் , இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் இசையில் உருவாக இருந்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பயங்கர எதிர்பார்ப்புடன் வெளியானது. அதில் விக்ரம் கையில் வில் மற்றும் அம்புடன் போர்க்களத்தில் ஆயிரம் யானைகள் சூழ போரிடுவது போல இருந்த அந்த போஸ்டர் வெளியானபோது பலரையும் ஆச்சரியப்பட வைத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டி வந்த நிலையில் இந்தப்படம் சில பல காரணங்களால் கைவிடப்பட்டது.

  யோஹன்: அத்தியாயம் ஒன்று

  யோஹன்: அத்தியாயம் ஒன்று

  காதல் படங்கள் எடுப்பதில் வல்லவரான கௌதம் வாசுதேவ் மேனன் முதல் முறையாக ஆக்சன் கதைக்களத்துடன் இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்கயிருந்த யோஹன்: அத்தியாயம் ஒன்று படத்தின் போஸ்டரில் விஜய் மரண மாஸான லூக்கில் கோட் சூட்டுடன் கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு இன்டர்நேஷனல் லெவலில் பிரம்மாண்டமாக உருவாக இருந்த இந்த படம் ஆக்சன் திரில்லர் கலந்த படமாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த படம் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது. மேலும் இந்த படம் தான் தற்போது விக்ரம் நடித்து துருவ நட்சத்திரம் என்ற பெயரில் உருவாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  மிரட்டல்

  மிரட்டல்

  கோடிக்கணக்கான ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் அஜித் குமார் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கயிருந்த படம் மிரட்டல். பெயருக்கேற்றவாறு மிரட்டலாக வந்த இந்த படத்தின் போஸ்டர்கள் அனைவரையும் மிரள வைத்தது. ஏ.ஆர் முருகதாஸ், அஜித்குமார் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியடைந்த தீனா படத்தை தொடர்ந்து இவர்கள் இணையும் இந்தப்படம் கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், பின் ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. மேலும் மிரட்டல் படம் தான் சில ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் இயக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவேலை மிரட்டல் படம் அஜித் நடிப்பில் வெளிவந்திருந்தால் கோலிவுட் திரைத்துறையே அதிர்ந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

  ராணா

  ராணா

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வெள்ளி விழாவை சூடி வந்த வேளையில். இவர்கள் கூட்டணியில் மீண்டும் உருவாக இருந்த மற்றுமொரு படம் ராணா. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜைகள் அனைத்தும் போடப்பட்டு புகைப்படங்கள் மற்றும் வேற லெவலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் என வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் ரஜினியின் உடல்நிலை காரணமாக இந்த படம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. மேலும் இந்த படத்தின் கதைதான் பின்னாளில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கோச்சடையான் என்ற உயர் ரக அனிமேஷன் தொழில்நுட்பத்தில் திரைப்படமாக வெளியானது எனவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு பல உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களே கடைசி நேரத்தில் காலை வாரிவிடும் நிலையில் பல ஆயிரக்கணக்கான அறிமுக நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் எண்ணற்ற படங்கள் இதேபோன்று கடைசி நேரத்தில் கைவிடப்படுவது இங்கு தொடர் கதையாகி வருகிறது.

  English summary
  Tamil Cinema leading heroes movie dropped in various stage of making
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X