»   »  'தமிழ் எம்.ஏ' டூ 'கற்றது தமிழ்'!

'தமிழ் எம்.ஏ' டூ 'கற்றது தமிழ்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil


ஜீவா, அஞ்சலி நடித்துள்ள தமிழ் எம்.ஏ. படத்தின் பெயர் 'கற்றது தமிழ்' என கேளிக்கை 'வரிக்கோசரம்' மாற்றப்பட்டுள்ளதாம்.

Click here for more images

தமிழில் வெளியாகும் படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டினால் கேளிக்கை வரி விலக்கு அளித்து வருகிறது தமிழக அரசு. இதனால் இப்ேபாதெல்லாம் தமிழிலேயே படப் பெயர்களை சூட்டி வரிச் சலுகையை அனுபவிக்கிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள் (படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் நோ சலுகை).

இந்த நிலையில் ஜீவா, அனுபமா என்ற அஞ்சலி நடிக்க, ராம் இயக்க உருவாகியுள்ள தமிழ் எம்.ஏ படத்தின் பெயரையும் கேளிக்கை வரிச் சலுகைக்காக கற்றது தமிழ் என தற்போது மாற்றி விட்டனர். படத்தை செப்டம்பர் 28ம் தேதியிலிருந்து அக்டோபர் 5ம் தேதிக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.

இது ஒரு நிஜக் கதையாம். எம்.ஏ தமிழ் படித்து முடித்த ஒரு இளைஞன் வேலை தேடி அலையாய் அலைந்த நிஜக் கதையை படமாக்கியுள்ளார் ராம். அரசுக் கல்லூரியில் கூட தமிழ் படித்த ஒருவருக்கு வேலை கிடைக்காத அவல நிலையை இதில் அப்பட்டமாக சொல்லியுள்ளாராம்.

இப்படத்தில் ஹீேராயினாக நடித்துள்ள அஞ்சலி சென்னைப் பெண். ஆனால் சொந்த மொழி தெலுங்காம். இருந்தாலும், நல்ல தமிழ் பேசும் பாவையாக இருக்கிறார். இதுதான் அஞ்சலிக்கு முதல் படம். ஆனால் அழகாக நடித்துள்ளாராம்.

இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை காமெடி நடிகர் கருணாஸ் வாங்கியுள்ளாராம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இவரே விநியோகம் செய்யப் போகிறாராம்.

Read more about: anjali tamil ma

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil