»   »  நமீதாவுடன் திருமா!

நமீதாவுடன் திருமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நமீதா, அபிநயஸ்ரீ ஆகியோர் திறமை காட்டவுள்ள கரிசல் மண் என்ற படத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் நடிக்கவுள்ளார்.

முழு நேர அரசியல்வாதியான திருமாவளவன், வர வர முழு நேர நடிகராக மாறி வருகிறார். அன்புத்தோழி படத்தில் புரட்சி வீரனாக நடித்துள்ள திருமாவளவன் அடுத்து மன்சூரன் அலிகானின் என்னைப் பார் யோகம் வரும் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.

இதையடுத்து கரிசல் மண் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் திருமாவளவன். இப்படத்தில் மொழிப் போர் தியாகியாக நடிக்கிறாராம் திருமாவளவன்.

அறிவுச்சோலை கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார்.

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் மொழிப் போருக்காக போராடி தியாகம் செய்தவர்கள் குறித்த கதையாம் இது. இதில் தியாகி வேடத்தில் வருகிறார் திருமாவளவன்.

இப்படத்தில் குலுக்கல் திலகங்களான நமீதா, அபிநயஸ்ரீ ஆகியோரும் உள்ளனர். இவர்களை எப்படி திறமை காட்ட வைக்கப் போகிறார் தமிழ்வாணன் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இவர்களுக்கேற்றபடியே கேரக்டரைசேசஷன் இருக்கும் என நம்பலாம்.

அதேபோல ஆட்டோகிராப் மல்லிகாவும் படத்தில் இருக்கிறார். தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி விறுவிறுப்பாக வளர்க்கவுள்ளனராம்.

மொழிப்போர் தியாகியான திருமாவும், காஸ்ட்யூம் தியாகியான நமீதாவும் இணையும் இப்படம் எப்படி இருக்குமோ?

நச் கொசுறு

நான் அவனில்லை படத்தில் ஒரு கும்மான காட்சி வருகிறதாம். அதாவது காட்சிப்படி, நாயகனான ஜீவன், நமீதாவை முதுகில் தூக்கி சுமந்தபடி நடிக்க வேண்டுமாம். ஆனால் பிரமாண்டமான நமீதாவை தூக்கி முதுகில் வைத்தால் முதுகெலும்பின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று மிரண்டுள்ளார் ஜீவன்.

இதைப் பார்த்த நமீதா, பூ, அம்புட்டுத்தானா நீங்க என்று இளக்காரமாக ஒருலுக் விட்டுள்ளார். அவ்வளவுதான், எங்கிருந்துதான் அந்த வேகம் வந்ததோ ஜீவனுக்கு, தம் பிடித்து கும்மென நமீதாவைத் தூக்கி உப்பு மூட்டை சுமந்து அசத்தி விட்டாராம்.

சுகமான சுமைதானே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil