twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்ஸ்

    By Staff
    |

    கேள்வி: எப்படி.. திரையுலகம்,பாப் உலகம் என்று கலக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.?

    பதில்: சந்தோஷமாக செய்து கொண்டிருக்கிறேன். சாதனை ..உயரமான இடத்திற்கு செல்லவேண்டும் என்கிற துடிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. செய்வதை மிக -நன்றாக அழகாக செய்யவேண்டும் இன்னும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறதுடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். என் விஷயத்தில் திலிப் சேகரை மறக்-க முடியாது. பிறந்தது -மும்பை, வளர்ந்ததுபடித்தது டெல்லியில்..டிப்படையிலேயே இசை பிடித்தவிஷயம்.கொஞ்சம் வளர வளர.. எண்ணங்கள் மாற.. இசை மீதும் ஆர்வம்அதிகமானது. சென்னைக்கு அடிக்கடி வருவதுண்டு. லீவு.. உறவினர்கள் வீடு என்று அடிக்கடி சென்னைக்கு வருவது உண்டு..அப்பொழுது தான் திலிப்சேகர் அறிகமானார்.

    நான் பாடிய சில பாடல்களை கேஸட்டில் பதிவு செய்து வாய்ஸ் டெஸ்ட்க்காக அனுப்பிவைத்தேன். -நன்றாக இருக்கிறது என்றுவரச்சொன்னார்.-ந-ரில் சென்று பாடிக்காண்பித்தேன். உடனே பான்ட்ஸ் கம்பெனி விளம்பரத்தில் பாடச்சொன்னார். அது ஹிட்.அடுத்து ஒரு ஆல்பம். setny free ஆங்கிலத்தில் செய்தோம். நாடோடித்தென்றல் படத்தில் காதல் பாட்டுத்தான் பாடிகோ பாடிகோபாடல் அது தான் -முதல் சினிமா பாட்டு இளையராஜா மியூசிக்..பாட்டு ஹிட். பிறகு அடுத்து அடுத்து என்று தொடர்கிறது.

    (திலிப்சேகர் ...திலிப்சேகர் என்று சுபா சொல்வது வேறு யாரையுமில்லை..ஏ.ஆர்.ரஹ்மானைத்தான்.)

    கேள்-வி: காதல்.. இதுபற்றி எழுத்து..படம்..பாட்டு என்று சொல்லாத விஷயமில்லை..சொல்லாத படமும் இல்லை. -ரியல் லைப்பில்காதல் -செய்-தி-ருக்-கி-றீர்-க-ளா சுபா?

    பதில்: வாவ்.. நல்ல விஷயம்ங்க அது.. காதல் இல்லைன்னா உலகமே அசையாது.. காதல்ங்கிறது..காதலன் காதலின்னு மட்டும்பார்க்காதீங்க. வீட்டுல அப்பா, அம்மா, தங்கை, தம்பி மற்ற உறவுகள்.வெளியே நட்பு, அலுவகத்தில் உடன் பணிபுரிபவர்கள்எல்லோர்மீதும் சின்னதாக ஒரு தொடர்பு இருக்கும் அது தான் காதல். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தைகாதலிப்பதால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது. எல்லாம் ஏன் இந்த உலகமே காதல்மையமானது தான்.

    சுரேஷ் கைலாஷைப் ( கணவர்) பார்த்தது ஆரம்பத்தில் காதலோடு இல்லைதான் என்றாலும் (சிரிக்கிறார்..) பின்பு அவர்மீது காதல்வந்து.. வளர்ந்து..திருமணமாகி இன்றும் அந்த காதல் தொடர்கிறது. எங்கள் காதல் ஆரம்பித்தது எல்லாம் கனவு மாதிரிஇருக்கிறது. 90 -களில்.. அடிக்கடி சென்னை வருவேன்.. திலிப்சேகருக்கு , என்னுடைய பாடல்களை பதிவு செய்து அனுப்பியதுமாதி-ரியே சுரேஷ்க்கும் கேஸட் அனுப்பிவைத்தேன்.. மனிதர் கேஸட்டை கண்டுகொள்ளவேயில்லை.

    தொடர்ந்து போன் செய்து கேட்டால் -நோ ரெஸ்பான்ஸ். ஒரு கோபத்தோடுதான் இருந்தேன். தீடீரென்று திலிப்சேகர் ஒருவிளம்பரத்திற்கு பாட வரச்சொன்னார். அங்கேதான் சுரேஷை சந்தித்தேன். திலிப்சேகர் தான் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தவிளம்பரத்தில் பாடியதைப்பார்த்து, நல்லா பாடறீங்க.என்றார். பிறகு தான் கேஸட்கொடுத்தது, போனில் பேசியதைசொன்னேன்.பிறகு காதல் வளர்ந்தது..திருமணம் முடிந்து இன்று -நான்கு வயதில் சுதர்ஸன்.. இப்பவும் ஐ லவ் சுரேஷ்..-நஸ் மேன்.(சுரேஷ் தனியார் விளம்பர கம்பேனி ஒன்றில் கி-ரியேட்டிவ் இயக்குனராக இருக்கிறார்.) என்றார் சுபா.

    -கேள்-வி: அடுத்து என்ன ஆல்பம் வரப்போகிறது..?

    பதில்: வால்பாறை வட்டப்பாறைதான்.. ரசிகர்களின் மேலான ஆதரவுக்கிணங்க.. மறுவெளியிட்டில் மும்-மு-ரமாக இருக்கிறோம்.அடுத்து மற்ற -நரங்களில் கிராமத்து இசைக்கலைஞர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். உண்மையான இசையைகவனித்துக்கொண்டிருக்கிறேன்.

    -கேள்-வி: ஆல்பங்களின் எதிர்காலம். இசைக்கலைஞர்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது.

    -ப-தில்: திடீரென்று ஒரு பிக்கப் ஆரம்பமாகியிருக்கிறது. இதற்கு காரணம். டாட்.காம், கம்யூட்டர் என்-று உலகம் காண்-கி-ற விஞ்ஞானவளர்ச்சி தான். ஆல்ப விற்பனை கம்யூட்டரில் நிடக்கிறது. ஒரு இசைக்கலைஞர்.அவருடைய இசையில் மட்டும் கவனம்செலுத்தினால் போதும் என்கிற நிலை வந்து விட்டது. இன்று இங்கு வெளியாகிற ஒரு பாட்டு ஆல்பம்..அடுத்த -நாடியில்அ--அமெ-ரிக்காவில் அல்லது உலகின் எந்த -மூலையிலும் கேட்கலாம் ரசிக்கலாம் என்கிற -நிலை வந்துவிட்டது. ஆச்சர்யமாஇருக்குதுங்க..என்கிறார்.

    -கேள்-வி: ஆரம்பத்திலேயே கேட்கவேண்டும் என்று நினைத்தோம்.அது என்ன சுபா.. மஞ்சள் கலர் துப்பட்டா, பைஜாமா, மஞ்சள்கலரில் வளையல்கள்..கையில் கூட மஞ்சள் கல-ரில் பேனா.. any thing special ..?

    -ப-தில்: கட கட வென சிரிக்கிறார். யெஸ்..யெஸ்..மஞ்சள் கலர் எனக்கு பிடித்தது. செண்டிமென்ட்.. இந்த கலர் தொடர்புடன் எதைஆரம்பித்தாலும்..அது எனக்கு சக்ஸஸ் தான்.. அடுத்-து வியாழக்கிழமை, ஆறாம் நம்பர் எல்லாமே ராசி.

    இதை விட எனக்கு முக்கியமான இரண்டு ராசிகளும் உண்டு..சுதர்ஸன்..(-நான்கு வயது மகன்), அடுத்து சுரேஷ் கைலாஷ்..என்றுசி-ரிக்கிறார் சுபா.

    குட் லக் சு-பா.

    Read more about: cinema malgudi suba singer songs
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X