twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவிய கவிஞர் வாலி நினைவு தினம்...இதெல்லாம் தெரிஞ்சா நிச்சயம் அவரை மிஸ் பண்ணுவீங்க

    |

    சென்னை : திருச்சிராப்பள்ளி ஸ்ரீனிவாசன் ரங்கராஜன் என்ற இயற்பெயரை கொண்ட கவிஞர் வாலி, 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தனது காவிய கவிதை வரிகளால் ஆட்சி செய்தவர்.

    15,000 க்கும் அதிகமான பாடல்களை எழுதிய வாலிக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. எம்ஜிஆர், சிவாஜி காலம் துவங்கி, தற்போதுள்ள அதர்வா, கார்த்தி, அஜித் வரை பாடல் எழுதிய இளமை கவிஞர் என பெயர் பெற்றவர்.

    காலத்தால் அழியாத பாடல்களை தந்த கவிஞர் வாலி 2013 ம் ஆண்டு ஜுலை 18 ம் தேதி காலமானார்.அவரது நினைவு நாளான இன்று, வாலி பற்றி பலரும் அரியாத பல அரிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    சிறப்பான விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணி.. ஹீராயினாக களமிறங்கும் வாரிசு நடிகை.. அட்ராசக்க! சிறப்பான விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணி.. ஹீராயினாக களமிறங்கும் வாரிசு நடிகை.. அட்ராசக்க!

    ரங்கராஜன் வாலியானது இப்படி தான்

    ரங்கராஜன் வாலியானது இப்படி தான்

    வாலி எழுதுவதைப் போலவே, ஓவியம் வரைவதிலும் வல்லவராவார். பள்ளியில் படிக்கும்போதே ஓவியம் நன்கு வரைவார். அக்காலகட்டத்தில், ஆனந்த விகடனில், "மாலி" என்பவர் வரைந்த ஓவியங்கள், மிக பிரபலமாக விளங்கின. அவரைப்போலவே இவரும், ஓவியத்துறையில் வளர்ந்து வரவேண்டும் என்றெண்ணி, வாலியின் பள்ளித்தோழர் பாபு, வாலிக்கு அப்பெயரை இட்டார். வாலியின் இயற்பெயர் "ரங்கராஜன்" என்பதாகும்.

    டைரக்டர் வாலி பற்றி தெரியுமா

    டைரக்டர் வாலி பற்றி தெரியுமா

    மாருதிராவ் என்பவருடன் இணைந்து, வாலி, ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். படத்தின் பெயர் "வடைமாலை" என்பதாகும். 1982ல் வெளியான இந்த படம் தோல்வியடைந்தாலும், தரமான படமென்று, விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் விருதாக ஒரு லட்சம் ரூபாய் இப்படத்திற்குக் கிடைத்தது.

    வாலி பாடலில் திருப்தி அடையாத கமல்

    வாலி பாடலில் திருப்தி அடையாத கமல்

    "அபூர்வ சகோதரர்கள்" படத்தில், ஒரு பாடலின் சூழலுக்கு, வாலி நான்கு, ஐந்து பாடல்கள் எழுதியும், கமலஹாசனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. கமலஹாசன், தன் அதிருப்தியை இளையராஜாவிடம் வெளியிட, இளையராஜா அவரைச் சமாதானப்படுத்தினார். பிறகு, இளையராஜா வாலியிடம், பக்குவமாக விஷயத்தை எடுத்துரைத்து, கமலின் எதிர்பார்ப்பை விளக்கினார். அதன்பிறகு வாலி எழுதிய பாடல், அனைவரையும் கவர்ந்து, சாகாவரம்பெற்ற பாடலானது. அப்பாடல்தான் "உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்" என்ற பாடலாகும்.

    ஒரே கவிஞர் வாலி தான்

    ஒரே கவிஞர் வாலி தான்

    ஐந்து தலைமுறைகளுக்கு, ஏறத்தாழ 12000 பாடல்களுக்கும் மேல் எழுதி, உலகிலேயே அதிக திரைப்படப்பாடல்கள் எழுதியவர் என்ற சாதனையைப் படைத்தவர், "வாலி" ஒருவரே.வாலி, 16 படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார் என்ற விஷயம் பலரும் அறியாதது.

    கண்ணதாசனையே குழப்பிய வாலி

    கண்ணதாசனையே குழப்பிய வாலி

    வாலியின் பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போது, கண்ணதாசனுக்கே இப்பாடல் நாமெழுதியதா?என்ற சந்தேகம் எழும். அந்த அளவிற்கு, தத்ரூபமாக, கண்ணதாசனே மயங்கும் வண்ணம், பாடல்களை எழுதியுள்ளார் வாலி.

    எம்ஜிஆரை கலாய்த்த வாலி

    எம்ஜிஆரை கலாய்த்த வாலி

    எம்.ஜி.ஆர், வாலியிடம், ஒருமுறை குறும்பாக, "நீங்கள் இந்த படத்தில் பாடல்கள் எழுதியிருந்தாலும், உங்கள் பெயரைப் படத்தில் போடப்போவதில்லை" என்றார். வாலியோ ஜாலியாக, "எனது பெயரில்லாமல், உங்கள் படத்தையே வெளியிடமுடியாது" என்றார். எம்.ஜி.ஆர் எப்படி என்று வினவ, " இந்த படத்தின் பெயர் "உலகம் சுற்றும் வாலிபன்". இதில் வாலியை எடுத்து விட்டால் "உலகம் சுற்றும் பன்" என்றல்லவா ஆகும்?" என்று கூற, எம்.ஜி.ஆர், நன்கு சிரித்தபடி, வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

     வாலி எழுதிய சுயசரிதை

    வாலி எழுதிய சுயசரிதை

    வாலி, சுயசரித நூலும் எழுதியுள்ளார். "இருபதாம் நூற்றாண்டும் நானும்" என்பது, அந்த நூலின் பெயராகும். முழுமையான சுயசரிதை நூலென்று, இதைக் கூறமுடியாவிட்டாலும், வாலி, தன் வாழ்வியல் நிகழ்வுகள் பலவற்றை, விவரித்துள்ளார்.

    எம்ஜிஆர் - சிவாஜி வாலிக்கு வைத்த பெயர்

    எம்ஜிஆர் - சிவாஜி வாலிக்கு வைத்த பெயர்

    52 எம்.ஜி.ஆர் படங்களிலும், 66 சிவாஜி படங்களிலும் வாலி பாடல்கள் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்களே 136 தான் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர், வாலியை "ஆண்டவரே!" என்று அழைப்பார்; சிவாஜி "வாத்தியாரே!" என்று அழைப்பார்.

    எப்படி எழுதியிருக்கார்

    எப்படி எழுதியிருக்கார்

    வாலி எழுதிய பாடல்கள், மிகவும் பிரபலமான முதல்படம் "கற்பகம்" ஆகும். இந்த படப்பாடல்களில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்து பாடல்களும் பாடகிகளுக்கானவை; பாடகர்களின் குரலுக்கு வேலையே இல்லை.

    அரசு தடை செய்த படம்

    அரசு தடை செய்த படம்

    வாலி, கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள் எழுதிய "ஒரே ஒரு கிராமத்திலே" திரைப்படம், இடஒதுக்கீடு முறைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்ததால், கடும் எதிர்ப்புகளைப் பெற்றது. சமூகத்தில் கொந்தளிப்பை உண்டாக்கியதால், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட முதல் திரைப்படமாக இது அமைந்தது. திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படாமலே, தேசியவிருதைப் பெற்றது. தற்போது வலியுறுத்தப்படும், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை, இப்படத்தில் வலியுறுத்தியிருப்பார் வாலி. நீதிமன்ற வசனங்கள் ஆணித்தரமாக அமைந்திருந்தன.

    தேசிய விருதை மறுத்த வாலி

    தேசிய விருதை மறுத்த வாலி

    1973ல் வெளியான "பாரதவிலாஸ்" படத்தில் இடம்பெற்ற, "இந்திய நாடு என்வீடு" என்ற வாலியின் பாடலுக்கு, தேசியவிருது கிடைத்தது. அரசியல் முரண்பாடு காரணமாக, இவ்விருதை ஏற்க மறுத்துவிட்டார் வாலி.

    ஒரே பாடலாசிரியர் இவர் தான்

    ஒரே பாடலாசிரியர் இவர் தான்

    மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரண்டுவகை கவிதைகளை எழுதுவதிலும் வல்லுநராக விளங்கினார் வாலி. இத்திறமை படைத்த முதல் தமிழ்ப்படப் பாடலாசிரியர் வாலியே ஆவார்.வாலி, பாடல்வாய்ப்பு தேடிய நாட்களில், அவரை, பல சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைத்துப்போய், பாடல்வாய்ப்பு கேட்டு, வாலியின் உயர்வுக்கு வழிவகுத்தவர், திரைப்படக் குணச்சித்திர நடிகரான "வி.கோபாலகிருஷ்ணன்" ஆவார்.

    முதல் படத்திலேயே எம்ஜிஆரை கவர்ந்த வாலி

    முதல் படத்திலேயே எம்ஜிஆரை கவர்ந்த வாலி

    எம்.ஜி.ஆர் படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதிய முதல்படம் "படகோட்டி". இப்படத்திற்கு இரு பாடல்களை மட்டுமே எழுதினார் வாலி. பாடல்களைப் படித்து அசந்துபோன எம்.ஜி.ஆர், அப்படத்தில், அனைத்துப் பாடல்களும் எழுதும் வாய்ப்பை வழங்கியதுடன், தனது படங்களுக்கு, இனி வாலியே, பிரதானமாகப் பாடல்கள் எழுதுவார் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.

    வாலியின் ஸ்பெஷாலிட்டி

    வாலியின் ஸ்பெஷாலிட்டி

    வாலி, படத்தின் கதை சாராம்சத்தை, சுருங்கிய வடிவில் கூறுவதில் வல்லவர். இளையராஜா இசையில், அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர் வாலிதான்.தமிழ்ப்படப் பாடலாசிரியர்களிலேயே, டைமிங்சென்ஸ் காமெடி மற்றும் பஞ்ச் வசனங்கள் பேசுவதில் வல்லுநராக விளங்கியவர் வாலிதான்.

    இந்த பாட்டை எழுதியது வாலி தானா

    இந்த பாட்டை எழுதியது வாலி தானா

    தீவிர முருக பக்தர் வாலி. திரையுலகில், பிரபலமாவதற்கு முன்பே, "கற்பனை என்றாலும்", "ஓராறு முகமும்" உள்ளிட்ட சில முருகன் பாடல்களை எழுதிப் பிரபலமானவர்; பிற்காலத்தில் "சரவண சதகம்" என்ற முருகன் புகழ்பாடும் வெண்பா நூலையும் இயற்றினார்.

    English summary
    Today poet Vaali's 9th death anniversary. He has written more than 15000 songs in Tamil films.He died on 18 July 2013 in Chennai at the age of 82.Here we recall the memories about Vaali.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X