»   »  தாகம் தீர்க்காத சினிமா - வைரமுத்து

தாகம் தீர்க்காத சினிமா - வைரமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனது இலக்கிய தாகத்தை சினிமா தீர்க்கவில்லை. அடுத்த நூற்றாண்டிலும் நான் அறியப்பட வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் படைத்தேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

திருப்பூர் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் கவிஞர் தினமாக கொண்டாடப்பட்டது.

இதில் கவிஞர் தமிழச்சிக்கு வைரமுத்து விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வைரமுத்து பேசுகையில் தமிழ் சினிமா தனது இலக்கிய தாகத்தைத் தீர்த்து வைக்கவில்லை என்ற தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்திப் பேசினார்.

ஒருவர் பிறக்கும்போது தாய், தந்தை, சித்தப்பா, சித்தி, மாமா என்று 10 முதல் 30 சொந்தங்கள் இருப்பார்கள். ஆனால் நடுத்தர வயதை எட்டும்போது இந்த சொந்தங்கள் பாதியாக குறைந்து போகிறது.

1980களில் வைரமுத்து எழுத வந்தபோது எனக்குக் கொடுக்கப்பட்டது காதல், காதல், காதல். அந்தக் காதலை மட்டும் வைத்துக் கொண்டு 27 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். சினிமா என்னுடைய இலக்கிய தாகத்தைத் தீர்த்து வைக்கவில்லை.

எனவேதான் எனது படைப்புகள் அடுத்த நூற்றாண்டிலும் அறியப்பட வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் நான் இயற்றினேன் என்றார் வைரமுத்து.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil