»   »  விஜய் டிவி: பாடும் ஆஃபீஸ் இறுதிச் சுற்று!

விஜய் டிவி: பாடும் ஆஃபீஸ் இறுதிச் சுற்று!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vijay Tv - Paadum Office

தமிழ் தனியார் தொலைக்காட்சிகளில் புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் விஜய் டிவி கணிப்பொறி நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் டென்ஷனை குறைப்பதற்காக குமரன் சில்க்ஸ் பாடும் ஆஃபீஸ் எனும் புதுமையான நிகழ்ச்சியை நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் இன்போசிஸ், சிடிஎஸ், சத்யம், போலாரிஸ், ஐ நாட்டிக்ஸ், ஆர்ஆர் டானெல்லி உள்பட பல முன்னணி நிறுவனங்களிலிருந்து ஏராளமானோர் தங்களின் இசைத் திறமையை நிரூபித்து தாங்களும் இசையில் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் தெரியப்படுத்தினர்.

குமரன் சில்க்ஸ் நிறுவனத்தார் வழங்கும் பாடும் ஆஃபீஸ் நிகழ்ச்சி கடந்த 10 வாரங்களாக 3 சுற்றுக்களாக நடந்து முடிந்தது. அதில் லைட் மியூசிக் எனும் சோலோ சுற்றும் இடம் பெற்றுள்ளது.

இவர்களில் 40 பேர் முதல் சுற்றில் தேர்வாகி கால் இறுதி, அரை இறுதி சுற்றுகளை சந்தித்து இறுதி சுற்றில் 8 பேர் போட்டியிடுகின்றனர்.

இவர்களை பிரபல பின்னணி இசைப் பாடகர்களான ராஜலட்சுமி, கிரிஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் ஆகியோர் தேர்வு செய்கிறார்கள். இவர்களுக்கு குரல் வளத்தை மேம்படுத்த புதிய பல முறைகளை ஜோஷ்வா ஸ்ரீதர் கற்றுத் தருகிறார்.

இந்த லைட் மியூசிக் சோலோ இறுதி சுற்றில் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதை வரும் நாளை 19ம் தேதியன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குமரன் சில்க்ஸ் பாடும் ஆஃபீஸ் நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil