twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கதை பிடித்திருந்தும் பார்த்திபன் இயக்கத்தில் நடிக்க தயங்கிய விஜயகாந்த்... காரணம் சொன்ன தானு

    |

    சென்னை: இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பன்முகங்கள் கொண்ட பார்த்திபன் இயக்கி, நடித்த முதல் திரைப்படம் புதிய பாதை.

    முதல் படமே தேசிய விருதுகள், மாநில விருதுகள் வாங்கி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    அபூர்வ சகோதரர்கள் என்ற மிகப்பெரிய படத்துடன் போட்டியாக வெளியாகி வெற்றி பெற்றது.

    அந்த 3 ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க மாட்டேன்...ஏன் ஜான்வி கபூருக்கு அவங்களுடன் என்ன பிரச்சனை? அந்த 3 ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க மாட்டேன்...ஏன் ஜான்வி கபூருக்கு அவங்களுடன் என்ன பிரச்சனை?

    கேள்விக் குறி

    கேள்விக் குறி

    கேள்விக்குறி என்ற கதையை எழுதி பல தயாரிப்பாளர்களிடமும் நடிகர்களிடமும் கதை சொல்லி அலைந்துள்ளார் பார்த்திபன். ஒரு தயாரிப்பாளர் மட்டும் படத்தை எடுக்க முன் வந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர் சூட்டிங் நிறுத்தப்பட்டதாம். அதன் பின்பு மீண்டும் தயாரிப்பாளர்களை தேடி அலைந்திருக்கிறார். கடைசியாக சுந்தரம் என்பவர் தான் படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார்.

    ரஜினி-கமல்

    ரஜினி-கமல்

    இந்த கதையை நடிகர் ரஜினிகாந்த்,கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் அர்ஜுன் என பல நடிகர்களிடம் கூறியிருக்கிறார். நடிகர் கமலஹாசனின் தீவிர ரசிகரான பார்த்திபன் அவரிடமும் இந்த கதையை கூறிய போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனது. தான் நடிக்காததால்தான் பார்த்திபன் என்ற நல்ல நடிகர் நமக்கு கிடைத்திருக்கிறார். இல்லையென்றால் வெறும் இயக்குநராக மட்டுமே இருந்திருப்பார் என்று கமல்ஹாசன் எப்போதும் பாராட்டுவார்.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    ஒரு முறை தயாரிப்பாளர் தானுவிடவும் இந்த கதையை கூறியிருக்கிறார். அப்போது விஜயகாந்திடம் கதையை கூறச் சொல்லியிருக்கிறார். அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டதாம். ஆனால் தானுவிடம்,"கதை, திரைக்கதை மட்டும் பார்த்திபன் பண்ணட்டும். வேறு இயக்குநரை வைத்துக் கொள்ளலாம்" என்று விஜயகாந்த் கூற, பார்த்திபன் பாக்யராஜிடம் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். கதையும் நன்கு கூறுகிறார் என்று தானு மீண்டும் கூற விஜயகாந்த்திற்கு அதில் உடன்பாடு ஏற்படவில்லையாம். தானு அவரை மேற்கொண்டு அவரை வலியுறுத்தாமல், பார்த்துபனை அழைத்து உன்னிடம் கதையை மட்டும் கேட்கிறார். உன்னிடம் கதையை மட்டும் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. நீ என்ன சொல்கிறாய் என்று கேட்க, தான் இயக்குவதற்குதான் இந்தக் கதையை எழுதினேன் என்று பார்த்திபன் அந்த வாய்ப்பை மறுத்தாராம்.

    சத்யராஜ் அர்ஜுன்

    சத்யராஜ் அர்ஜுன்

    இதே போலத்தான் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் அர்ஜுனும் சில காரணங்கள் அதில் நடிக்கவில்லை. இறுதியாக தயாரிப்பாளர் சுந்தரம் நீங்களே நடித்து விடுங்கள் என்று கூற பார்த்திபன் அதை ஏற்று இருவரும் அதனை தெரிவிப்பதற்காக ரஜினிகாந்திடம் சென்றுள்ளனர். இவர்கள் தெரிவிப்பதற்கு முன்பாகவே பார்த்திபன் இந்தக் கதையில் கதாநாயகனாக நடித்தால் என்ன என்று ரஜினிகாந்த் கூறினாராம். இருவருமே அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்களாம். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தின் ராணுவ வீரன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருந்தார். பின்னர் படம் துவங்கப்பட்டது. படத்திற்கு கிளாப் அடித்து துவக்கி வைத்தது தயாரிப்பாளர் தானு. கேமராவை ஆன் செய்தது விஜயகாந்த் என தானு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    English summary
    Vijayakanth reluctant to act in Parthiban's direction even though he liked the story, Thanu said the reason
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X